Sunday, October 4, 2026

குழந்தை மனம் 💛

டோமோயி நூலகத்தில் வெட்டியாக கதை பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு சிறுவன் அவனின் பக்கத்து வீட்டில் வசிக்கும் அங்கிஷ் என்ற ஒரு சிறுவனைப்பற்றி ருசிகரமான விஷயம் ஒன்றை சொன்னான். ஒரு முறை மூன்று இரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து நேர்ந்த போது இவன் ஒரு இரயிலிலும், இவனின் தந்தை ஒரு இரயிலிலும், தாய் மற்றொரு இரயிலிலும் இருந்ததாக சொன்னானாம். எங்கள் வீட்டருகிலும் ஒரு சிறுவன் உண்டு. நிறைய இம்மாதிரியான பொய்களை சொல்லுவான். 😀

இம்மாதிரி சில குழந்தைகள் விளையாட்டாக, ஆனால் நிஜம் போன்றே சில பொய்களை அவ்வப்போது சொல்வதுண்டு. பெரியவர்களாகிய நமக்கு அது பொய் என்று தெரியும், ஆனாலும் அதனை இரசித்து கடந்து செல்வதுமுண்டு. மற்றவர்களை பாதிக்காத பொய்யாக இருக்கும் வரையில்.💛

உடனே குட்டி ஆகாயத்தின் "ரஷ்ய சிறார் இலக்கியம்" தொடர்பான சிறப்பு இதழை எடுத்து இரு சிறுவர்கள் பொய் சொல்லி விளையாடும் கதையினை முழுமையாக வாசித்தேன். குழந்தைகள் வேடிக்கை பார்க்கும் நேரத்தை தவிர்த்து தங்களால் இயன்றவரை கதையைக் கேட்டனர். கதை முடிந்தவுடன் அதில் தங்களுக்கு பிடித்த ஒரு இடத்தினை சொல்லலாம் என்றவுடன் தாங்கள் கேட்ட ஏதோ ஒரு பகுதியினைக் கூறினர்.😍


அதில் ஒரு குழந்தை இந்த பகுதியைக் கூறினாள்:

"நான் தெருவில் நடந்து கொண்டிருந்த போது ஒரு பேருந்து வேகமாக வந்தது. அது என் கிட்ட வரும் வரை நான் கவனிக்கவில்லை. மிக அருகில் வந்தவுடன் தான் பார்த்தேன். உடனை அந்த பேருந்தை நான் நசுக்கி விட்டேன். அது சட்னியாகி விட்டது."

நண்பன், "வாய்ப்பே இல்லை"

"இல்லை, இல்லை, உண்மை தான். அது ஒரு பொம்மை பேருந்து.  ஒரு சிறுவன் கயிற்றில் இழுத்து வந்து கொண்டிருந்தான்," 

இப்பகுதி நன்றாக இருந்தது என்றாள் அந்த சிறுமி. நான் உடனே இதனை கற்பனை செய்து பார்த்தால் சிரிப்பாக உள்ளது என்றவுடன், அச்சிறுமி, "நான் கற்பனை செய்து பார்த்தேன். அந்த பொம்மை பேருந்தை இழுத்து வந்த சிறுவன் பாவம். அவன் எப்படி அழுதிருப்பான் என்று தான் எனக்கு தோன்றியது," என்றாள். 😔

குழந்தைகள் வேறு ஒரு தளத்திலிருந்து தான் எதையும் பார்க்கிறார்கள்! அவர்களின் மனம் பேரழகு தான்! 💖

கேள்வி நல்லா தான் இருக்கு - 8

சென்ற வார இறுதியில் டோமோயி நூலகத்தில் நடைபெற்ற ஒரு உரையாடலின் போது மாணவர்கள் அனைவரும் நாங்கள் சென்று வந்த ஒரு வழித்தடத்தினை ஒரு வரைபடமாக மாற்ற முயற்சி செய்து கொண்டு வருமாறு தெரிவிக்கப்பட்டது. அதனை தங்களின் எண்ணத்திற்கேற்ப, தங்களுக்கு பிடித்த மாதிரி செய்யலாம் என்று சொல்லியிருந்தோம். பரிசுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தோம். வரும் வாரத்தில் தான் குழந்தைகள் அதனை முடித்து வருவார்கள் என்று நம்புகிறோம்.

இந்த உரையாடல் முடித்து வந்த அன்றைய இரவு ஒரு வெள்ளைத்தாளினையும், ஒரு பென்சிலையும் எடுத்து வந்து பக்கத்தில் படுத்துக் கொண்டு எங்களது மகள் "இப்படி செய்யலாமா? அப்படி வண்ணம் கொடுக்கவா? ரோடு வளைவா வரையலாமா?" என்றெல்லாம் பல கேள்விகளை கேட்டுக் கொண்டே வரைபடத்தினை உருவாக்கத் தொடங்கினாள்.


சட்டென்று,

"அம்மா, நீ libraryல சொல்லிட்ட. எனக்கு மட்டும் இது easy ல"

"ஏன் அப்படி சொல்ற? எல்லாரும் வரைய முடியும். ஒவ்வொன்னும் வித்தியாசமா இருக்கும், அவ்வளவு தான்," என்றேன்.

"இல்ல ம்மா, வீட்ல எல்லா சந்தேகத்தையும் உங்கிட்ட கேட்டு கேட்டு செய்யறேன், என் friends  எல்லார் வீட்லையும் இப்படி சொல்லி கொடுக்க முடியாது தெரியுமா?" என்றாள் முகம் வாடியபடு.

சரியான பதில் கிடைக்குமுன் எனக்கும் அந்த வருத்தம் தொற்றிக்கொண்டது. "ஆமாம் correct தான், அதனால தான் நம்மால முடியும்போதெல்லாம் நம்ம நூலகத்த திறந்து வைக்கிறோம்," என்றேன்.

"இருந்தாலும் எனக்கு இருக்கு மாதிரி அவங்களுக்கு இருக்காதுல?" என்றாள் வருத்தத்துடன்.

சரிதானே! ஒப்புக்கொண்டேன். கேள்விக்கு வேறு பதில் சொல்ல இயலவில்லை.

சமமான கல்வி என்பது சாத்தியமற்றது. அது ஒரு குழந்தையின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், வீடு, தெரு, அக்கம்பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்கள், சூழல் என பலவற்றை சார்ந்தே இருக்க முடியும். 😐 

குறைந்தபட்சம், சமமான பாடதிட்டம் மட்டுமே வழங்க இயலும் என்பது தான் நிதர்சனம்! 😔

பின் குறிப்பு: மற்ற குழந்தைகளைப் பற்றியும் அவள் சிந்தித்தது அந்த கேள்வியின் பாரத்துடன் சேர்த்து சின்ன நிம்மதியையும் கொடுத்தது. சரியாகத் தான் வளர்ந்து வருகிறாள் என்று!

Telegram - An unknown mode of communication 😊

During a small walk around our town, Tirunelveli, we, as a group, took a small halt near the oldest post office of the town and a dead telegraph office nearby. 😇

Post offices are known to children by one way or the other. But Telegraph Offices are not due to its extinction. The purpose of telegraph office was explained to the kids and that is how they got introduced to the other related term "telegram." In Tamil, it is called as "Thanthi" (தந்தி). 😐


This was the fastest mode of communication, say three decades ago, when there were no telephones. A family would receive telegram only when it was extremely important and in almost all cases, intimation of someone's death would be it. Because for rest of the important matters, time constraint would not be an issue. So, when a family receives "Thanthi", everyone would naturally panic. This can be better understood by today's generation by relating it to the cell phone calls families receive at odd hours. 💔


The Telegram messages would be as short as possible for every word was charged. I had a relative who used to work as post-master and he was the only one to send wishes after every annual exam via telegram. Otherwise only economically sound families used the service to send greetings and wishes to their loved ones. 💗

After the entry of telephones, mobile phones and internet, the use of telegram started declining very fast and the government found it economically non-profitable to still run that department. Therefore, in 2013, India decided to bid good-bye to the age-old telegraph offices and thereby bringing the telegram services to an end! 💔


The government kept the office open for everyone to use this service one last time. A service that was almost always used to share the terrible news across friends and family, was at last used to share some good moments. People thronged telegraph offices to create a memory of their own by sending telegrams to their loved ones across the country. They were equally thrilled to receive one. There were unusual long queues on the last week, and particularly the last day! 😊

It was so heartening to see how people are emotionally driven when something is about to become past, just a memory. After all, we all are bound by love! 💖

The small walk randomly brought these thoughts! :-) 

டோமோயி நடைபயணம் - 1

சென்ற ஆண்டு கொல்கத்தா சென்றிருந்த போது "கொல்கத்தா நடைபயணம் (Calcutta Walks)" என்ற ஒரு அமைப்புடன் பதிவு செய்து கொண்டு அவர்களின் வழிநடத்தலில் ஒரு சிறிய பகுதியை நடந்து, பேசி, உண்டு நிறைய அறிந்து கொண்டோம். அந்த அனுபவம் அருமையான ஒன்று. உடன் நடந்தவர்களுடன் சின்ன சின்ன உரையாடல், தெருக்களின் வாசம், கடைகளின் கூட்டம், வீதியோர உணவு என அனைத்தும் மனதில் என்றும் நிலைப்பவையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 😍

அந்த அனுபவத்தால் இவ்வாறான நடைபயணங்களை நாமும் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாளாக செயல்படுத்தப்படாமல் மனதிற்குள் இருந்தது. அக்டோபர் 2. 2026 அன்று இனிதே துவங்கியது. 💚

திருநெல்வேலி எங்களது சொந்த ஊர் இல்லாவிட்டாலும், இந்த ஊரின் பெருமையினை தொடர்ந்து அறிந்து கொண்டு வருகிறோம். வாய்மொழியாகவும், புத்தகங்கள் வழியாகவும், இலக்கிய கூட்டங்களின் வாயிலாகவும் நிறைய தகவல்களையும், வரலாற்றுப்பதிவுகளையும், ருசிகரமான சம்பவங்களையும் தெரிந்துகொண்டு வருகிறோம். அதனடிப்படையில் ஒரு குழுவாக இன்று முதல் நடைபயணத்தை மேற்கொண்டோம். 💟

நாங்கள் கண்ட, கதைகள் பேசிய, சுற்றிய பகுதிகளின் பெயர்களும் புகைப்படங்களும், மிகச் சுருக்கமான அறிமுகமும் கீழே. 🙌

1. பிள்ளையை போட்டு பலாப்பழம் எடுத்த ஓடை - ஒரு தாய் தனது பிள்ளையை கரையோரத்தில் வைத்து விட்டு ஓடையில் மிதந்த பலாப்பழத்தை எடுக்கச் சென்றாராம். பின்னர் பிள்ளையை காணவில்லையாம். திருநெல்வேலி, கொக்கரக்குளம் அருகில் உள்ளது இவ்விடம்.

2. தாமிரபரணி ஆற்றின் தொடக்கம், முடிவு (கடலில் சேரும் இடத்தை டோமோயி நூலகம் மூலம் முன்னரே பார்த்துள்ளோம் என்பது குறிப்பிடதக்கது; அது ஒரு நடைபயணமாக இல்லாமல், ஒரு நீண்ட மகிழுந்து பயணமாக அமைந்தது), அதன் சிறப்பு, அதன் இன்றைய அவலம் என்பது பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

3. சுலோச்சன முதலியார் பாலம் - ஆங்கிலேயர் காலத்தில் தனி ஒரு நபரால் திருநெல்வேலியில் ஒரு பாலம் கட்டப்பட்டு இன்று வரை பயன்பாட்டில் உள்ளது. ஆற்றங்கரையின் இரு பக்கங்களை இணைத்த முதல் பாலம். 

4. அரவிந்த் கண் மருத்துவமனை - காந்திய வழியில் அனைவருக்கும் தரமான மருத்துவம் வழங்கி வரும் அமைப்பு. அதன் தொடக்கமும், சிறப்பும் பகிரப்பட்டது.

5. திருவள்ளுவர் ஈரடுக்குப் பாலம்/இரட்டை பாலம்/கலைஞர் பாலம் - ஆசியாவின் முதல் இரண்டடுக்குப் பாலம். இன்று வரை இரு அடுக்குகளும் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

6. தபால் நிலையம் மற்றும் தந்தி நிலையம் - திருநெல்வேலியின் முதல் தபால் நிலையம் மற்றும் தற்போது செயல்பாட்டில் இல்லாத தந்தி நிலையம் காண்பிக்கப்பட்டு, தந்தி பற்றி குழந்தைகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

7. சென்ட்ரல் டாக்கீஸ் - திருநெல்வேலியின் பழமையான திரையரங்கம். இயக்கம் நிறுத்தப்பட்டு ஆண்டுகள் ஆகின்றன. ART DECO என்ற கட்டட அமைப்பின் படி கேலரி (GALLERY) வடிவில் இருக்குமாம். வெளி தோற்றமுமே அரை வட்ட வடிவில் தான் இருக்கும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே சீட்டுகள் வழங்க அமைக்கப்பட்ட கூண்டு போன்ற வரிசையினை காண்பித்தோம்.

8. வ.உ.சி மணி மண்டபம் - வ.உ.சி தலைமையில் நடைபெற்ற கூட்டம், அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற கைது போன்றவை கதையாக கூறப்பட்டு, அவரின் இன்னபிற செய்திகளும் எடுத்துரைக்கப்பட்டது. 

9. பெரியார் நூற்றாண்டு நினைவுத்தூண் - திருநெல்வேலி நகரத்தின் மையத்தில் பெரியாரின் நூற்றாண்டின் நினைவாக நிறுவப்பட்ட தூண், மற்றும் அதில் பொறிக்கப்பட்ட செய்திகள் ஆகியவை வாசிக்கப்பட்டன.

நடை இனிதே நிறைவுபெற்றது. முடித்த இடத்தில் அடுத்த மாத நடைபயணத்தை துவக்க எண்ணியுள்ளோம். ஆறு சிறியவர்களும், மூன்று பெரியவர்களும் கலந்துகொண்ட இந்த நிகழ்வு மன நிறைவாக இருந்தது. 💗

மறு நாள் இது குறித்து குழந்தைகளின் எண்ணங்கள் கேட்டறியப்பட்டன. 💖

Tuesday, May 26, 2026

இயல் மின்னிதழில் ஒரு புத்தக அறிமுகம்

சிறார் இலக்கியம் சார்ந்து இணையத்தில் செயல்பட்டு வரும் "இயல்" மின்னிதழில் "கோல்யா சினிட்சனின் நாட்குறிப்புகள்" என்ற ரஷ்ய சிறார் நாவலுக்கு எழுதிய புத்தக அறிமுகம் வாசிக்க 👇

கோடை விடுமுறையின் தேன்துளிகள்: ‘கோல்யா சினிட்சினின் நாட்குறிப்புகள்



இயற்கை, குழந்தைகள், கோடை விடுமுறை - இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து இரசிக்கக்கூடிய நாவல் இது. வாசித்து மகிழுங்கள்! 😎

தேர்தல் பணி - அனுபவம் (2)

ஒவ்வொரு தேர்தலிலும் மனதில் நிற்கும் பல சம்பவங்கள் இருக்கும். அது போன்று தான் இம்முறையும். 💗

2026 சட்டமன்ற தேர்தலின் போது ஒரு அரசு பள்ளியில் தேர்தல் பணியிலிருந்தேன். நல்ல வெயில். பக்கத்துக் கட்டத்திலிருந்த கழிப்பறைக்குச் செல்வதே அந்த வெயிலில் கொடுமையாக இருந்தது. அப்படிப்பட்ட வெயிலில் 85 சதவிகதத்திற்கும் அதிகமானோர் நான் பணியிலிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். இயல்புக்கு மாறாக நிறைய குழந்தைகள் வந்திருந்தனர். பல சுவாரஸ்யங்களை கவனிக்க நேர்ந்தது. 😍

அவற்றுள் மனதை ஏதோ செய்த ஒன்று, இந்த நிகழ்வு. 💖

மதியம் 2 மணி இருக்கும். (வெயிலை மறந்து விட வேண்டாம்) ஒரு அம்மா (65 வயதிருக்கும்) கையில் இரண்டு பைகளுடன் வாக்களிக்க வந்தார். இரண்டு பைகளையும் வாக்குச்சாவடியில் வாயிலில் வைக்கலாமா என்று கேட்ட பின்னர் அங்கு வைத்துவிட்டு உள்ளே வந்தார். தலையினை மொட்டை அடித்திருந்தார். மிகவும் சிரமப்பட்டு, பொறுமையாகச் சென்று வாக்களித்து விட்டு வந்தவர் தான் அரசு மருத்துவமனையிலிருந்து நேரடியாக வருவதாகவும், புற்றுநோய் சிகிச்சை பெற்று வருவதாகவும் சொன்னவுடன் அதிர்ந்தது. கையில் கொண்டு வந்த பையானது மருத்துவமனையிலிருந்து கொண்டு வந்த துணிகள் மற்றும் மருந்துகள் என்றார்.     

ஒரு புற்றுநோயாளி, தன் உடல்நலம் குன்றிய நிலையில், தன்னுடன் துணைக்கு வர எவரும் இல்லாமல், மூட்டை முடிச்சுடன், மருத்துவமனையிலிருந்து நேரடியாக வாக்களிக்க வருவது என்பது என்னால் சற்றும் நம்ப முடியாமல் போயிருக்கும், இதனை நான் நேரில் கண்டிராமல் இருந்திருந்தால்!


அந்த கண்களிலும், உடலிலும், மனதிலும் என்னென்ன ஏக்கங்களுடன், எதிர்பார்ப்புகளுடன் அவர் வந்திருப்பார் என்பதை உங்களால் ஊகிக்க முடிகிறதா!!! 

அவருக்கு அவர் எதிர்பார்ப்பது கிடைக்க அந்த இயற்கையிடம் பிரார்த்திப்பதை தவிர என்னால் வேறு என்ன செய்ய முடியும்!! 💚

கேள்வி நல்லா தான் இருக்கு

 இந்தப் பதிவு கொஞ்சம் தாமதமாக வருகிறது.

“அம்மா, இந்த வாரம் நிறைய விடுமுறை இருக்குமா, ஜாலி,” என்றாள் என் மகள்.

“ஆமாம் பாப்பா. வெள்ளி, சனி, ஞாயிறு மூணு நாள் இருக்கு,” என்றேன்.

“வெள்ளிக்கிழமை என்ன விசேஷம் ம்மா?”

“Good Friday பாப்பா,” என்றேன்.

சற்று நேர அமைதிக்குப் பின்பு;

“அப்போ மத்த Fridays எல்லாம் Bad Fridayவா?” என்றாள் சிரிப்போடு.

“அப்படி இல்ல,. அந்த நாள் Christians க்கு முக்கியமான நாள்,” என்றேன்.

“என்ன முக்கியமான நாள்?”

“அந்த நாள் தான் Jesusஅ சிலுவையில ஆணி வெச்சு அடிச்சிட்டாங்க அவர் அன்னைக்கு இறந்து போய் மூணாவது நாள் திரும்ப உயிரோடு வந்தாரு,” என்றேன்.

“ஒருத்தர் செத்துப் போயிட்டாரு, இல்ல எல்லாரும் சேந்து கொண்ணுட்டாங்க. அது எப்படி Good Friday வா இருக்க முடியும்?”

-------

Monday, March 9, 2026

குட்டி ஆகாயத்தின் புதிய கதை - ஜெனியின் பரிசு

குழந்தைகளின் பிரார்த்தனைகள் என்னவாக இருக்கும்?

என்னவாக இருந்தாலும் பெரியவர்களின் அறிவுக்கு எட்டாததாகத்தான் இருக்கும்!!

"ஜெனியின் பரிசு" என்ற கதையினை படித்த போது அடுத்து இதுவாக இருக்குமோ என்று நான் நினைத்த எதுவுமாக அக்கதை இல்லை. ஜெனியின் எண்ணமும் ஆசையும் பிரார்த்தனையும் வேறாக இருந்தது. அது அழகாகவும் இருந்தது!

"அபியும் நானும்" என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி உண்டு. வீட்டில் உள்ள அனைவரும் அவ்வீட்டின் உரிமையாளரின் திருமண நாளினைக் கொண்டாட ஐந்து நட்சத்திர உணவகத்திற்கு செல்வர். கிளம்பும் வேளையில் அந்த வீட்டின் குழந்தை அவர்கள் வீட்டில் வேலை செய்பவரையும் (வீட்டில் ஒருவராகவே வாழ்ந்து வரும் நபர்) அழைத்து செல்லலாமா என்று கேட்பாள். சரி என்று அழைத்துச் செல்வர். அங்கு பெரியவர்கள் அவர்களுக்குள்ளே பேசிக் கொள்வர்:

"இவரை அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஏன் நமக்கு தோணல?"

"அதெல்லாம் குழந்தைகளுக்குத் தான் தோணும். நாம தான் வளந்துட்டோமே!"


"ஜெனியின் பரிசு"ம் அப்படித்தான். அடுத்தவர்களைப் பற்றியும் அவர்களின் தேவைகளைப் பற்றியும் நினைக்கும் குழந்தைகளின் மனது விசாலமானது. அவர்களின் உலகில் ஏகப்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் உண்டு. இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொருவரும் மற்ற யாருக்கோ கிறிஸ்துமஸ் தாத்தாவாகவும் இருக்க முடியும் என்று குழந்தைகள் நமக்கு காண்பிக்கின்றனர்.  அதை இன்று நாம் சுருக்காமல் இருந்தாலே போதுமானது. எதிர்காலத்தில் போர்கள் கூட குறையக்கூடும். 

சிறார் சொன்ன கதை வரிசையில் குட்டி ஆகாயத்தின் புதிய வெளியீடு - ஜெனியின் பரிசு.

குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும்! 💗

Wednesday, February 25, 2026

Priya, Happy Annachi! :-)

My husband often tells me not to mingle with adults, as it does not do any good to me. Instead, it brings all nonsense into my life. So, he always encourages me to stay active with kids around as this fits me. I prefer kids to adults, of course. Not because they are easy to manipulate unlike adults, but because we get along well.

One recent incident that endorses this view of mine is "Zi," a tiny little boy sharing his sadness that Tirunelveli did not have an airport. He feels that an airport in this city would make it easier for both of us to reach the other one easier. He also shared that it would be great to have a magic machine that in no time transports us (Zi & I) to each other's place whenever we wanted.  

                                     
google images

Fantasy is a beautiful part of life. It is meant not only for children but also to those of us who love living with beautiful souls. I do know better than that 6-year-old kid that this whole idea of magic machine was an imaginary one and would not happen, nevertheless it was so lovely to expand this idea with him to many levels. That made my whole week. I could not stop smiling thinking of this conversation, no matter what I do.

Love you Zi :-) 

P.S.: Hop along only if you are either a child or is there a beautiful child inside you. Otherwise, please spare me, ;-) as I do not have time and energy for you! :-)

Love You Mahe

It's been two years now, ammu. I did not write to you since March 2024. But you are there in my thoughts every day! Every time I talk to aunty or text Murugan or meet Amala papa, you are there everywhere. 

Since I had not written to you so long, I realized I did not write to anyone for that matter. It has always been between us to exchange 'N' number of letters. Whenever I visit Chennai, the railway stations remind me of you. Whenever I recall those days, I wish I had spent some more time with you. I wish I we had travelled even more on those trains. Those platforms look empty without you. Oh god, can we go back to those days!

You were a great listener. Today was one among many days when I felt that you were missed to share about what I went through. You were never judgmental. I was blessed to have you around. Yet I regret not understanding it completely.  

Whenever I visit aunty and uncle, I am reminded of you persuading me to stay in your house. You in fact told me once that your home had a fish tank assuming that I would like it and stay overnight. Unfortunately, I never got a chance to spend night in your room. Today, that living room of yours has a large portrait which I cannot take my eyes off from or sometimes do not want to look at. I never thought such a day would come in our lives. I miss you terribly Mahe. I really hope you are safe somewhere out there, watching all this and listening to all that we speak about you in your absence. 

Had we known this fate before, we would have hugged more, kissed more and wrote each other more. Though we all moved on with our lives from the day you left us, do know that this akka, like many out here, misses you! 

I still remember the way you told me to buy chocolates for Laali (I did. Had you not told me, I would not have done so) and I also remember that I had shared several times with you that I did not hug her during our first meet. Life did not give me a chance to do it again. How unlucky I am!

Love you Mahe!



புத்தகக் கண்காட்சி - மாற்றம் தேவை

நெல்லையில் 9வது புத்தகத் திருவிழா நிறைவடைந்தது. சென்னை புத்தகத் திருவிழாவை ஒப்பிடும் போதோ, இன்னும் ஒரு சில பெரிய நகரங்களை ஒப்பிடும் போதோ இது மிக மிகச் சிறியது. எனினும் மாவட்டந்தோறும் தமிழக அரசு நடத்துவது மிகவும் பாராட்டுக்குரியது. இது போன்ற மாவட்ட புத்தகத் திருவிழாக்கள் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்பது சிறப்பு.

                                              google images
எனினும் இந்த ஆண்டு நெல்லை புத்தகக் கண்காட்சியில் கண்ட ஒரு பெரும் குறை பலரால் விவாதிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். 

புத்தகக் கடைகள் குறைவு தான். அதிலும் குழந்தைகளுக்கென பிரத்யேகமான புத்தகக் கடைகள் வெகு குறைவு. அதிலும் தமிழில் ஒன்றிரண்டு மட்டுமே. ஆங்கிலத்தில் ஐந்தாறு இருந்தன. பெற்றோருடன் குழந்தைகள் வருகின்றனர். அது தவிர பள்ளிகள் குழந்தைகளைக் கூட்டமாக அழைத்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் பள்ளிகள், கல்லூரிகள் குழந்தைகளை அழைத்து வருவதை உறுதி செய்கின்றனர். 

பள்ளிகளை பொருத்தவரை அரசு பள்ளி குழந்தைகள் குறைவாகவும், தனியார் பள்ளி அதிகமாகவும் அழைத்து வருவதை பார்க்க முடிகிறது. ஏனெனில் அரசு பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகளைப் போன்று போக்குவரத்து வசதி இல்லை. அதிலும் சிறிய குழந்தைகளை பொது பேருந்தில் அழைத்து வருவது சிக்கல் தான். இவ்வாறு பல இடையூறுகளுக்கிடையில் தான் குழந்தைகள் புத்தகத் திருவிழாவிற்கு அழைத்து வரப்படுகின்றனர். பிள்ளைகளை புத்தகங்கள் கொட்டிக்கிடக்கும் இடத்திற்கு அழைத்து வருவதே சவால் நிறைந்து.

இவ்வாறு இருக்கையில் புத்தகத் திருவிழாவின் ஒரு சில (பல) கடைகளில் அரசு பள்ளி சீருடையில் இருக்கும் மாணவர்கள் புத்தகங்களை தொட்டுப்பார்க்கக் கூட கடை பொறுப்பாளர்கள் அனுமதிப்பதில்லை என்பது வேதனைக்குரியது!!!! குழந்தைகள் தனியாக கடைகளுக்குள் சுற்றிப்பார்த்தால் எந்தத் தடையும் இல்லை. புத்தகங்களை தொட்டு, எடுத்துப் பார்க்கும் போது, "எடுக்காதே, தொடாதே, கலைக்காதே" என்று நேரடியாக சொல்லப்படுகிறது. ஆங்கில புத்தகக் கடைகளில் இவ்வாறு நடப்பது அதிகம். தமிழ் புத்தகக் கடைகளில் குறைவு. பெற்றோருடன் வரும் குழந்தைகளிடம் இவ்வாறு நடப்பது அரிது. மேலும் வயதில் மூத்த பள்ளி மாணவர்களிடமும் இவ்வாறு பெரும்பாலும் சொல்லப்படுவதில்லை. சிறிய குழந்தைகளிடமே இவ்வாறு நடந்து கொள்கின்றனர். தனக்காக குரல் கொடுக்க முடியாத குழந்தைகளிடம் நம் அதிகாரத்தைக் காட்டியே பழக்கப்பட்ட சமூகம் தானே நாம்!

பல நேரங்களில் எந்த குழந்தை புத்தகம் வாங்க காசு வைத்திருக்கும் என்ற முன்முடிவோடு அங்கு பலர் அமர்ந்திருக்கின்றனர். புத்தகம் வாங்கினாலும், வாங்காவிட்டாலும் பார்க்கும் உரிமை குழந்தைகளுக்கு இல்லையா!? இல்லையெனில் "குழந்தைகளுக்கு அனுமதி இல்லை" என்று எழுதி ஒட்டிவிடலாமே! இப்போக்கினை நான் சென்னையில் கண்டதாக நினைவில்லை. சிறிய ஊர்களில் இது அதிகம் என்று நினைக்கிறேன். வேறு சிலரும் பள்ளி மாணவர்களுக்கு, அதிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, இவ்வாறு நடப்பதை அவர்களும் கண்டதாகத் தெரிவித்தனர்.

பல முயற்சிகளுக்குப் பிறகு பள்ளிக் குழந்தைகள் புத்தகத் திருவிழாக்குள் வருகின்றனர். புத்தகங்களை தொட்டு, எடுத்து பார்க்கக் கூட அனுமதிக்காவிட்டால், அவர்களை எவ்வாறு வாசிப்புக்குள் கொண்டு வரப்போகிறோம்? இவ்வாறு தடுக்கப்பட்டால், அவமதிக்கப்பட்டால் புத்தகங்களிடமிருந்து குழந்தைகளை இன்னும் தூரமாக்குகிறோம் என்பதில் சந்தேகமேயில்லை.

மொழிகளால் தொலைந்தவர்கள் - 2

கிரியின் கதையை படிக்கும் போது சில நினைவுகள். பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நாங்கள் சென்னைக்கு "மிக அருகில்" குடியேறிய போது, அடுத்த நிலத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட இருந்தது. அப்போது வேறு மாநிலத்தைச் சேர்ந்த குடும்பம் அங்கு வந்து சேர்ந்தனர். அப்பா, அம்மா, பெரியவள் ஆறு வயது இருப்பாள், சின்னவள் இரண்டு வயது இருக்கும். அந்த சிறிய குட்டி அனைவரையும் ஈர்க்கக்கூடியவள். அவளை கொஞ்சுவது வழக்கம். அவ்வாறே பெரியவளும் பழக்கமானாள். இருவருக்கும் மற்றவரின் மொழி கொஞ்சமும் தெரியாது. எனினும் பேசிக்கொள்வோம். சைகை செய்து கொள்வோம். அவர்களின் தாயுடனும் அவ்வாறே. 

சில நாட்களில் கழித்து தொடர்ச்சியாக இரண்டு, மூன்று நாட்களாக பெரியவளைக் காணோம். அவளின் அம்மாவிடம் கேட்ட போது சென்ற வார இறுதியில் அவர்களில் சொந்த ஊருக்கு அருகில் உள்ள விடுதி வசதியுடன் கூடிய பள்ளியில் சேர்த்து விட்டதாகவும், பார்ப்பதென்றால் மாதமொரு முறை மட்டுமே எனவும் கூறினார். எங்களுக்கு அதிர்ச்சி. முதலாம் வகுப்பு படிக்கும் வயது மட்டுமே. எனினும் விடுதியில் சேர்க்கப்பட்டது கவலையளித்தது. அவளின் பெற்றோருக்கும் கவலை தான். ஆனால் அவர்களுக்கு வேறு வழியில்லை. இங்கு மொழி பிரச்சனை, ஒரே இடத்தில் வேலை இருக்காது. மாறிக் கொண்டே இருக்க வேண்டும். குழந்தைக்கு கல்வி அவசியம் என்று உணர்ந்தவர்கள், பிரிவே மேல் என்று முடிவு செய்து குழந்தையை பிரிந்து வாழத் தொடங்கினர். அவள் தங்கிய விடுதியின் தொலைபேசி எண்ணில் வாரம் ஒரு முறை பேசுவோம். ஆம்! நானும் தான் பேசுவேன் - மொழி பிரச்சனையைத் தாண்டி தான்! 

சில மாத காலத்திற்குப் பிறகு அடுத்த பணியிடத்திற்கு அவர்கள் செல்ல வேண்டிய நேரம் வந்தது. அந்த குழந்தையையும், தாயையும் பிரிவது கண்ணீர் வரவழைத்தது. எனது தோழி அழகான ஒரு குழு புகைப்படத்தை எடுத்து ஆளுக்கொரு நகலினை கொடுத்தாள். அப்புகைப்படம் எங்குள்ளது என்று தேடிப்பார்க்க வேண்டும். இனி இரண்டு மூன்று ஆண்டுகளில் இந்த குழந்தையும் ஏதோவொரு விடுதியில் தங்கி பயிலும் என்று தோன்றியது. அதன் பிறகு சிறிது காலத்தில் அவர்களுடனான தொடர்பு அறுந்துவிட்டது. 

இன்று யோசிக்கையில் அக்குழந்தைகளின் பெயர் கூட நினைவில் இல்லை. எங்கோ நல்ல நிலையில் இருப்பார்கள் என்று நினைத்துக் கொள்கிறேன். நாம் சர்வ சாதாரணமாக "வடக்கன்ஸ்" என்றும் இன்னும் பிற வசை பாடும் சொற்களாலும், ஏளனம் செய்யும் சொற்களாலும் நம் மாநிலத்தில் வேலை செய்ய வருபவரை அடையாளம் காண்கிறோம். அவர்களின் சொந்த ஊரை விட்டு, உறவுகளை விட்டு, ஏதோ ஒரு வேலை செய்து தன் குடும்பத்தைக் காக்க போராடிகிறார்கள். அதிலும் இது போன்ற போராட்டத்தில் அக்குடும்பங்களின் குழந்தைகள் அனுபவிப்பது தனி போராட்டம் தான்.

Thursday, February 19, 2026

மொழிகளால் தொலைந்தவர்கள் - 1

"மொழிகளால் தொலைந்தவன்" - இப்புத்தகம் கிரி என்ற சிறுவனின் கதை. வட இந்தியாவில் பிறந்து, சிறுவனாக இருந்த போது, அவனின் பெற்றோர்கள் சொந்த கிராமத்தில் விவசாயம் செய்ய இயலாததால் தொடர்ந்து இந்தியாவின் பல மாநிலங்களில் தங்கி கட்டட வேலை செய்ய இடம்பெயரும் குடும்பத்தைச் சேர்ந்தவன். அவர்கள் செல்லும் ஒவ்வொரு மாநிலத்திலும், அவனுடைய, அவனின் சகோதரியுடைய கல்வி பாதிக்கக்கூடாது என்ற காரணத்தினால் பெற்றோர்களால் பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். எனினும் புதிய ஊர், புதிய மொழி என்ற அவஸ்தையினால் பெரும் போராட்டம் தான் எஞ்சுகிறது அக்குழந்தைகளுக்கு. ஒவ்வொரு ஊரிலும் ஏதோ ஒரு ஆசிரியரோ, நண்பர்களோ, அக்கம்பக்கத்தினரோ உதவ முன்வருவதால் அப்புது மொழியினைக் கற்று குழந்தைகள் தேர்ச்சி பெறுகின்றனர். பெரும் முயற்சி, அவமானங்கள், வலிக்குப் பிறகே!

கிரிக்கு உத்வேகம் கொடுத்து உதவும் ரஜினி, தனக்கு கிடைத்த சைக்கிளை கிரி பள்ளி செல்ல கொடுக்கும் தாபா ஒன்றில் வேலை செய்யும் சோட்டூ, தினமும் பாடம் சொல்லித் தரும் வித்யா அக்கா, கிரியின் முதல் நண்பர்கள் முரளி, நகுல், கோபக்கார ஆசிரியர் என அனைத்தும் நம் மனதில் ஆழமாக பதியக்கூடியவே. கிரி ஒவ்வொரு ஊராக மாறும் போது அவனுடைய கண்ணீர் நம்மை பாதிக்கிறது. அக்குழந்தைக்கு மீண்டும் எப்போது புதிய நண்பர்கள் கிடைப்பார்களோ என்ற ஏக்கம் நமக்கும் தொற்றுகிறது.

ஒரே ஊரில் பள்ளி மாற்றும் போதே குழந்தைகள் சந்திக்கும் சிக்கல்கள் நிறைய. பெரும்பாலும் குழந்தைகளைக் கேட்டு நாம் அந்த மாற்றத்தினை கொண்டு வருவதில்லை. பெரியவர்களின் முடிவு தான். வசிக்கும் வீட்டை மாற்றும் போதும் குழந்தைகள் அவர்களின் ஏக்கத்தினை சொல்வதற்குக் கூட நம்மில் பலர் வாய்ப்பு அளிப்பதில்லை. ஊர் மாறுவதும், பள்ளி மாறுவதும் குடும்பச்சூழ்நிலை போன்ற பல காரணங்களால் என்றாலும், குழந்தைகள் தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்தவாவது குறைந்தபட்சம் இடம் கொடுக்கலாம். கிரியின் வலியை நமக்கு கடத்துவதன் மூலம், அப்புத்தகத்தை வாசிக்கும் பெற்றோர்கள் எந்தவொரு மாற்றத்தினை முன்வைக்கும் போதும் குழந்தைகளின் எண்ணங்களுக்கு மதிப்பு அளிப்பார்கள் என்றே நம்புகிறேன்.

நிறைய மொழி கற்றுக்கொள்வது நல்ல விஷயம் என்று நாம் கருதுவதுண்டு. கிரி தான் செல்லும் ஊரின் மொழிகளைக் கற்றுக் கொண்டாலும் அதனால் அவனுக்கு பெருமை ஏதும் இல்லை என்பது நாம் பேச வேண்டிய கருபொருள். எதற்காக, எப்போது, எப்படி கற்றுக் கொள்கிறோம் என்பதை பொருத்தே ஒரு மொழியினை கற்ற திருப்தி கிடைக்கும். கட்டாயத்தின் பேரிலோ, வேறு வழியில்லாமலோ, சூழல் கைதியாகவோ கற்றுக்கொள்வது ஒருவருக்கு எந்த மகிழ்ச்சியினையும் அளிக்கப்போவதில்லை என்ற உண்மையை சொல்கிறது கிரியின் கதை.

Tuesday, February 17, 2026

கேள்வி நல்லா தான் இருக்கு - 6

ஓவியப் புத்தகத்தில் ஹிட்லரின் படமும் இருந்தது. ஒவ்வொரு பக்கமாக பார்த்துக் கொண்டு வந்தவள் "இவர் படத்தை மட்டும் நான் வரைய மாட்டேன்" என்றாள். காரணத்தை புரிந்துகொண்டதால் நான் அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் கடந்து விட்டேன்.

                                            google images


மறுநாள் வேறு இரு படங்களை வரைந்து விட்டு ஹிட்லரின் படத்தை வரைந்துக் கொண்டிருந்தாள். அதற்கும் நான் எதுவும் கேட்கவோ, சொல்லவோ இல்லை.

வரைந்து முடித்தவுடன்,

"அம்மா, ஹிட்லரோட நிஜ பெயர் என்ன?" என்றாள்.

"அதுல எழுதிருக்கு ல, அடோல்ஃப் ஹிட்லர். அதான் அவரோட பெயர்."

"ஓ, அப்படியா!" என்று ஆச்சரியத்துடன், "இல்ல ம்மா, அந்த பேர மக்கள் தான் அவருக்கு குடுத்தாங்க னு இவ்வளவு நாளா நெனச்சேன்" என்றாள்.

நான் "ஏன் அப்படி நெனச்ச?" என்று கேட்பதற்குள், அவளே காரணத்தையும் கூறினாள்.

"அவரு பேரு ஹிட்லர் ல "ஹிட்" னு இருக்குல, அதனால அது மத்தவங்க வெச்ச பேருனு நினைச்சேன்," என்று சாதாரணமாகச் சொன்னாள். இது வரை இவ்வாறெல்லாம் நான் யோசித்ததில்லையே என்று தோன்றியது.

தொடர்ந்தாள்:

"அம்மா, அவரோட wife இப்படியெல்லாம் தப்பு பண்ணக்கூடாதுனு அவர தடுக்கலையா?"

என் பக்கம் அமைதி மட்டுமே!!

"அவரோட அப்பா, அம்மா அவருக்கு சொல்லலையா, இப்படி செய்யக்கூடாதுனு?"

----------

"சின்ன வயசுல இருந்து அவங்க அப்பா, அம்மா சொல்லிக் குடுத்துருக்க மாட்டாங்களா?"

​​----------

"எப்படித்தான் அவருக்கு இப்படி தோனுச்சோ, இவ்வளவு பேர கொல்லலாம்னு? எப்படித்தான் இந்த மாதிரி எல்லாம் தோணுமோ?"

---------

"இப்படி எல்லாம் செஞ்சதால அவருக்கு ஏதாச்சும் நல்லது கிடைச்சிருந்தாக் கூட சரி, ஆனா யாருக்கும் நல்லது இல்லையே? அப்புறம் எப்படி அவருக்கு இந்த மாதிரி செய்ய யோசனை வந்துச்சு?"

-------

"ஏதாச்சும் சொல்லும்மா."

"ஏன் அவங்க வீட்ல அவருக்கு யாரும் சொல்லலனு தெரியல பாப்பா. நான் அத பத்தி படிச்சிட்டு சொல்றேன்."

(தெரிந்த) வரலாற்றைச் சொல்லிவிடலாம். ஆனால் இவ்வளவு கேள்விகளுக்கு பதில் நான் படித்த புத்தகங்களில் இல்லை. தேடல்... தேடுவோம்....

Sunday, November 30, 2025

Mawlynnong  💖 we love you 💝

It has been raining for the past few days in my town. It effortlessly reminds me of our visit to Mawlynnong, Meghalaya! Mawlynnong is known as the Cleanest Village of Asia! It cannot be disputed. The not-so-big village is clean everywhere. ✈⛱

We reached the village after sunset. Oh, not sunset, as it sets early everyday. We reached around 8pm and the village was serene in the beauty of dark! After having checked-in, we wanted to take a night walk around the village. We couldn't spot villagers except for a tiny shop or two. But there were a couple of other tourists wandering around to embrace the beauty of the village. Exchanging smiles, we walked around. The tiny shop had cute souvenirs and we grabbed a few. Here and there we got a glimpse of kids who had wide smiles! We were able to spot bamboo tree house and couldn't wait till morning to climb. And not to forget, many houses were built with bamboo, explaining their way of living. But we were told that many bamboo houses have now transformed to concrete building owing to meet increasing number of tourists. One hopes that their traditional style of living does not vanish! 🌘🌆


I spotted a beautiful entrance of 'something' with well-drawn pictures, only to find out later that it was a public restroom. We couldn't control laughter because we would never find one such place back home. There were bamboo-made dustbins every 50-100 meters and hut-like structures at the same intervals for people to sit and relax. Those were beautiful and makes one yearn for such spots even after months of our return from the village. If given a deeper thought to it, it is more like our own "kuttichuvar" in small towns and villages of our State, where people sit and chat for long hours. But these spots were extremely artistic. It seemed like bus shelters too. As it was not raining, we had a really long walk and returned. We decided to wake up early to see the morning beauty of the village. 💚


It was raining in the morning. It was a beautiful sight to see tiny, teeny children walking to school with umbrella as early as 6 am. We were reminded of our town where we all would be glued to television sets or internet to find out if a holiday is declared on rainy days. Here the children cannot be given holidays as it rains almost everyday!! Their umbrellas were the same and they looked cute. It reminded us of the common school bags our children receive in government schools. We were wondering if schools provide umbrellas to children as an essential good. We stayed opposite to a school and we could see their classrooms. When there was a break or something, we saw children reading, talking and spending time near windows, with a cool weather! It was a sight that could never be erased from our minds. Children live so close with nature, on a daily basis. After sometime, we saw children running and we were told that they were going home to have breakfast and come back. Imagine, how close their houses were!! Classes went till noon and the school was closed for the day. Now children join in the streets to play or help their parents in their chores attending to guests and tourists. 👫

After visiting a living root bridge near the village (it was again unique), we came back drenched in rain. Not willing to stay indoors, we decided to take a plunge into a small waterbody that was attached to a tiny waterfall. It was just behind the room we stayed and in the heavy rains, we were in the river, enjoying the new experience. It was so cold; yet we stayed at least for an hour! ⛆☂


There were a couple of beautiful bamboo tree houses that we couldn't resist enjoying for hours. We got the sight of Bangaladesh land from the top of the tree house. We laid down for some time and again got drenched in rain! It was a magnificient sight to see how skilled they are with bamboos. A walk along a field was quiet and enjoyable! 💗💗


We had learnt from the villagers that any income the village receives on the entry of tourists, they get equally divided among the families and thereby everyone takes a sense of ownership in protecting their village and keeping it as tidy as it is! They live in a network, and it was one of the many nice things we heard about Mawlynnong! 😍


Of the whole Meghalaya trip, Mawlynnong stayed close to our hearts, and it still is, and we hope to visit the village again! The rains here in my town bring back those memories and it is soothing! 💝

Friday, November 28, 2025

கேள்வி நல்லா தான் இருக்கு - 5

சில நாட்களுக்கு முன் "ஆன் ப்ரான்க்" பற்றிய ஒரு சிறிய ஆங்கில புத்தகத்தை மகளுக்கு வாசிக்க கொடுத்தேன். அரசு பள்ளியில் படிப்பதால் ஆங்கிலம் சிறிய கடினத்துடன் வருவது இயல்பு தான் என்பதால், பொறுமையாக படித்து கதையினை எனக்கும் சொல்லுமாறு கேட்டேன். ஒவ்வொரு பக்கமாக படித்து எனக்கு சொன்னாள்.

 Anne Frank - Cover Image

அப்போது ஒரு இடத்தில் 'ஆன் ப்ராங்கி'னை 'நல்லா கவனிச்சிக்க கூட்டிட்டுப்போனாங்க' என்று சொன்னாள். 

என்னது "நல்லா கவனிச்சிக்கவா?" "ஹிட்லரா?" "யூதர்களையா?" எனக்கு ஒன்றும் புரியவில்லை. 

"இல்லையே பாப்பா, அவங்கள சித்திரவதை செய்ய தானே பிடிச்சிட்டு போவாங்க!" என்றேன். 

"இல்ல அம்மா, 'concentration camp' க்கு கூட்டிட்டுப் போனாங்கனு தான் இந்த புக்ல போட்டிருக்கு. 'concentration' அப்படினா நல்ல கவனிக்க னு தான வரும்," என்றாள்.

அவளிடம், நிறைய மக்களை ஒரு இடத்தில் குவிப்பதால் அந்த பெயர் என்று சொன்னேன். குவித்து சித்திரவதை செய்யப்படும் இடம் தான் "concentration camp" என்றேன். 

பள்ளியில் 'concentration' என்ற வார்த்தைக்கு இனி  'ஆன் ப்ரான்க்' நினைவுக்கு வருவாள் என்று நினைக்கிறேன். சில பள்ளிகளில் நடப்பதும் சித்திரவதை தான் என்பதால், பெயர் காரணத்தில் பெரிய விவாதம் ஒன்றும் தேவையில்லை என்றே தோன்றுகிறது.

Thursday, November 6, 2025

Jane Goodall - A Netflix Interview

Jane Goodall - A name most of us would have come across in the last month as she passed away. As planned, her interview, titled "Famous Last Words - Dr Jane Goodall" was released by Netflix after her demise.

Is 'Famous Last Words: Dr. Jane Goodall' on Netflix UK? Where to Watch the  Series - New On Netflix UK

PC: google images

It was a wonderful watch with the family. Her childhood and how she was attracted to insects from a very young age were sweet. Her narration about her mother reminded me of Totto Chan's mother. Her mom made sure that none of her actions prevented young Jane from exploring the earth or anything for that matter. No wonder that Jane wanted to be greeted by her mother in the other world that she strongly believed in. This belief was contagious and it felt good for me as well to think on the same lines. I am sure that Jane and her mom would be spending some lovely time together watching all of us, from the other world which is invisible to us. On the other hand, interestingly, her role as a mother seemed to have had its own ups and downs, given her dedication towards her job that she valued & loved the most. She does not regret any of them.

One part I loved among few others is where she made a bold statement (!) on people she hated and what she wanted for them. Some of us would certainly align with her choices. She absolutely treated the whole world as her tiny teeny family and she wanted to keep it away from evil people. 

Another portion is her love towards animals, particularly Chimps, humans' closest relative (in her words). As we both share almost 96 per cent of DNA, both species are very similar in many ways, one being naturally aggressive. The way she expresses her love for her chimps is stunning. One would want to befriend a chimp right away :-) 😊

It is worth noting about her stance on luck and hard work that brought us to where she was. She was destined (she agrees herself to be lucky) to be where she was at the right time, with the right person and her hard work starting there determined the rest.

According to her, we are in war. War of protecting nature and fellow beings and this is as bad as the second world war. She left behind her legacy for the young generation to pick and carry forward. She wanted all of us to find beauty in all tiny little things around us. They might seem to be tiny but hide hell lot of surprises to beat all sorts of boredom we keep complaining about.  What is there to feel bored about on this earth!!! - This is one important message she leaves with us to ponder and experience. Next time we wait somewhere idle, we might be spending it as rather a quality time. That's something 'unable-to-live-without-cellphone' people like many of us need to try.

Towards the end, the host leaves the show and tells Jane that it is just her and the audience now and the latter would be listening to this when she would be "no more on earth." 

That moment..we all would feel something personal, known only to us. And also would want us to be "collective in nature" for nature to live long! 💖

An inspiring life journey she had! 💗 

Friday, October 31, 2025

புத்தகங்களும் மொழியாக்கங்களும் - அனுபவப் பகிர்வு

சமீபத்தில் சமூக ஊடகங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது உம்பர்ட்டோ எக்கோ எழுதி தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட "ரோஜாவின் பெயர்" என்ற புத்தகம். எதிர் வெளியீடு. இப்புத்தகத்தை நான் வாசிக்கவில்லை. பலர் இதனின் மொழியாக்கம் மோசமாக உள்ளதை சுட்டிக்காட்டினர். குறிப்பாக எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்கள் இதனை கடுமையாக விமர்சித்திருந்தார்.

எனது சொந்த அனுபவத்தில் நேரடி ஆங்கில புத்தகமானால் அதனை வாசிப்பதே சிறந்தது என்ற எண்ணம் உண்டு. பிற மொழி புத்தகங்கள் ஆங்கிலத்தில் கிடைக்காத பட்சத்தில் தமிழில் வாசித்தல் நலம் என்று எண்ணுவது உண்டு. இதெல்லாம் மீறியும் பல புத்தகங்களின் தமிழ் மொழியாக்கத்தை வாங்கிவிடுவதும் உண்டு. இந்த "ரோஜாவின் பெயர்" புத்தக சர்ச்சையின் போது தான் நான் இரண்டு புத்தகங்களை ஒரு வருடத்திற்கும் மேலாக வாசிக்க முடியாமல் திணறுவது நினைவுக்கு வந்தது. அப்புத்தகங்களை வாசிக்க அவ்வளவு சிரமமாக இருந்தது. படு மோசமான மொழியாக்கம். அந்த இரண்டுமே (கீழே) எதிர் வேளியீட்டுப் புத்தகங்கள் என்பது அதிர்ச்சி.



இதனைத் தொடர்ந்து மக்கள் பதிப்பாக (இலாப நோக்கமற்ற) வெளிவந்த "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற புத்தகத்தின் மொழியாக்கமும் சிறப்பாக இல்லை. மேற்குறிப்பிட்ட இரண்டு புத்தகங்களைவிட இது மேல். ஆனால் சில இடங்களில் அப்பட்டமாக ஆங்கில வார்த்தைகளின் நேரடி தமிழ் அர்த்ததை வழங்கியுள்ளது அபத்தம்.


ஆங்கிலமும் பிற மொழிகளும் தெரியாதவர்கள் அம்மொழிகளின் இலக்கயத்தினை அறிவது மொழியாக்கங்கள் மூலம் தான். மொழிப்பெயர்ப்பாளர்கள் இரண்டு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமில்லையா!!! மொழிபெயர்ப்பு என்பது சுலபமானதாக பார்க்கப்படுவது கொடுமையானது. நேரடியாக எழுதுவதைக் காட்டிலும் மொழியாக்கத்திற்கு திறமையும், தேர்ச்சியும் கூடுதலாகத் தேவை என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் புத்தகங்கள் அச்சில் ஏறுவதும், ஏற்றப்படுவதும் பெரும் சமூகச்சிக்கல் தான். சற்றேனும் பொறுப்புணர்ச்சியுடன் பதிப்பகங்களும், மொழிபெயர்ப்பாளர்களும் செயல்பட வேண்டியது அவர்களின் கடமை. 

குழந்தைகள் மீது திரைப்படங்கள் ஏற்படுத்தும் தாக்கம் 💖

இன்று வெளிவரும் பெரும்பாலான தமிழ் படங்கள் குடுப்பத்துடன் பார்க்கக் கூடாதது. பெரியவர்களே பார்க்க தகுதியில்லாத படங்கள் தான் வெளிவருகின்றன. அம்மாதிரியான படங்களைக் கூட நாம் குடும்பத்துடன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதன் மூலம் பல மோசமான முன்னுதாரணங்களை குழந்தைகளுக்கு நாமே அறிமுகப்படுத்தும் அவலம் தான் நிலவுகிறது.

இதன் விளைவாக பெரியவர்களாகிய நமக்கே "நல்ல" திரைப்படங்களைப் பார்க்கும் பொறுமை இல்லை. "விறுவிறு" என்று இருக்கும் படங்களையும், "மாஸ்" திரைப்படங்களையுமே பார்க்க விரும்புகிறோம். அதுவே சலிப்புத் தட்டாது என்று நமக்கு நாமே சொல்லுக்கொண்டிருக்கிறோம். இம்மாதிரியான சூழலில் எனக்கு ஏற்பட்ட இரண்டு அனுபவங்களை பகிருகிறேன். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு இரவில் இணையத்தில் "அன்பே சிவம்" என்ற திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தோம். படம் முடிந்தவுடன் மகள் ஒரே அழுகை. என்னவென்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் அந்த இரவு அழுதுகொண்டே உறங்கினாள். முதன்முறையாக என் குழந்தையின் மேல் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தைக் கண்டேன். பெரிதாக கதை புரிந்ததா என்பது தெரியாது. ஆனால் ஏதோ உணர்வுகளை தூண்டியுள்ளது.


சென்ற மாதம் "The Way Home" என்ற கொரியன் திரைப்படத்தை இணையத்தில் காண துவங்கினோம். எப்போதும் போல தொடர்ச்சியாக பார்க்க முடியாமல் மீதியை மறுநாள் பார்க்க முடிவு செய்தோம். மறுநாள் இப்போதே பார்க்க வேண்டும் என்று மகள் கேட்டதால் அவளை பார்க்கச் சொல்லிவிட்டு நாங்கள் சமையலறையில் வேலைப்பார்த்துக் கொண்டு இருந்தோம். திடீரென பெரும் அழுகையுடன் வந்து கட்டிக்கொண்டு "என்னால தனியா பாக்க முடியல. அப்பறம் சேந்து பாப்போம் ம்மா," என்றாள். 

  

மேற்குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களும் "அழுகை" என்ற உணர்ச்சியை குழந்தைக்கு தூண்டியது மட்டுமே தாக்கம் என்றில்லை. சந்தோஷமான உணர்ச்சிகளைத் தூண்டும் நல்ல திரைப்படங்களும் உண்டு. எவையெல்லாம் உண்மையில் சந்தோஷம் என காட்டும் திரைப்படங்கள் உண்டு. மகிழ்ச்சியின் பல்வேறு வடிவங்களை காணமுடியும். சமீபத்தில் தமிழில் வந்த "பறந்து போ" மாதிரி.

எனினும் பிறரின் இடத்தில் தன்னை நிறுத்தி பார்ப்பதும், அவர்களின் வலியை நம் வலியாக உணர்வதும் எவ்வளவு பெரிய தன்மை. அதனை "நல்ல" திரைப்படங்கள் போன்ற கலையால் நிச்சயம் செய்ய முடியும். 

#அன்பே_சிவம்    #the_way_home   #children_movies

Thursday, October 9, 2025

அடுத்தவருக்காக பேசுவது எப்போது?! 😔

(1)

சமீபத்தல் Youtubeல் ஒரு கானொளியைக் கண்டேன். ஒரு பேராசிரியர் காரணம் சொல்லாமல் ஒரு மாணவியை வகுப்பை விட்டு விரட்டுகிறார். அதனைத் தொடர்ந்து சட்டம் எதற்கு என்ற கேள்வியை மற்ற மாணவர்களிடம் கேட்க ஆளுக்கு ஒரு பதிலினை தருகிறார்கள். 'Justice' என்று தான எதிர்பார்த்த வார்த்தைக்காகக் காத்திருந்து அதனை பெற்றவுடன் "நான் அம்மாணவியை வெளியில் அனுப்பும் போது ஏன் ஒருவர் கூட என்னை தடுக்கவும் இல்லை அல்லது ஏன் அனுப்புகிறீர்கள் என்று எந்த கேள்வியும் கேட்கவில்லை," என்று பேராசிரியர் வினா தொடுக்க வகுப்பறை பதில் இல்லாமல் திக்குகிறது. தன்னுடன் வாழ்பவருக்காக (அநியாயத்தின் வளைக்குள் சிக்குபவர்களுக்காக) தன் குரலை சிறிதளவேனும் திறக்க இயலாதது எவ்வளவு பெரிய ஊனம்!!

(2)

சமீபத்தில் தேனி சுந்தர் அவர்கள் எழுதிய "உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார்" என்ற புத்தகத்தில் ஒரு சம்பவம். நூல் ஆசிரியரின் அனுபவம். ஆசிரியரான சுந்தர் அவரின் வகுப்பிற்கு செல்கிறார். வீட்டுப்பாடத்தினை சரிபார்க்கும் சமயத்தில் முடிக்காமல் வந்திருந்த ஒரு மாணவியை திட்டுகிறார். உடனே உடன் படிக்கும் மாணவர்கள் "ஏன் சார் திட்றீங்க? நாளைக்கு முடிச்சிட்டு வந்திடுவா. விடுங்க சார்," என்கிறார்கள். சம நண்பருக்கு பேசியதைக் கேட்டு ஆசிரியரும் விட்டுவிடுகிறார். வகுப்பில் நிலவும் ஜனநாயகத்தன்மையினை காட்டுவதோடு தன் தோழிக்காக பேசிய மாணவர்களைக் காணும் போது மகிழ்ச்சி ஒரு பக்கமும், நாம் அவ்வாறு இல்லையே என்ற அவமானம் இன்னொரு பக்கமும் எழுகிறது.

                                                               PC: google images

குழந்தையிலேயே பழகாமல் போனால் என்றுமே அடுத்தவருக்காகப் பேசும் திறனை வளர்த்துக்கொள்ள முடியாது போலும். இந்த வயதிலும் எனக்கு சகஜமாக வருவதில்லை. இதனை பெரும் குறையாக உணர்கிறேன்.😞 இன்றைய குழந்தைகளிடம் இதை வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கிறேன். ஏனெனில் வளர்ந்தபின் என்னைப் போன்று குற்றவுணர்ச்சி இல்லாமல் இருக்க உதவலாம்.

குழந்தை மனம் 💛

டோமோயி நூலகத்தில் வெட்டியாக கதை பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு சிறுவன் அவனின் பக்கத்து வீட்டில் வசிக்கும் அங்கிஷ் என்ற ஒரு சிறுவனைப்பற்ற...