Sunday, May 22, 2022

ரஷ்ய சிறார் இலக்கியச் சிறப்பிதழ் – வாசிப்பு அனுபவம்

குட்டி ஆகாயத்தின் 13வது இதழ் ரஷ்ய இலக்கியத்தினை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதாக அமைந்துள்ளது. ரஷ்யாவிற்கும் இலக்கியத்திற்குமான தொடர்பு, வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்களும் அறிந்த ஒன்று என்றே சொல்ல வேண்டும். எனினும் குழந்தைகளுக்கு ரஷ்ய இலக்கியம் அளித்துள்ள பொக்கிஷங்கள் பலவும், பலரும் அறியாதவை. அந்த வகையில் இந்த இதழ் ஒரு சிறந்த முன்னெடுப்பே. ஆங்கிலத்தில் First Comes First என சொல்வதுண்டு. அந்த வகையில் இந்த இதழ் பழுப்பு நிற பக்கங்களில் அச்சிட்டுள்ளது மிகவும் பொருத்தம். ரஷ்ய இலக்கியத்தின் தொன்மைக்கானக் குறியீடாகத் தோன்றுகிறது. மேலும் குட்டி ஆகாயம் தனக்கென ஒரு குறிப்பிட்ட கட்டமைப்புக் கொள்ளாமல் ஒவ்வொரு இதழுக்கும் ஏற்றவாறு தன்னை வடிவமைத்துக்கொள்வது அருமை. 

இந்த இதழில் என்னை கவர்ந்த ஐந்து விஷயங்கள்:

(1 (1) முதலாவதாக இடம்பெற்றுள்ள “கதை சொல்லி” என்ற கதை. கதையின் சாராம்சம், இரு சிறுவர்கள் யார் அதிகமாகவும், பிரம்மாண்டமாகவும் பொய் சொல்கிறார்கள் என்பது.  பொய் சொல்லக் கூடாது என நம் பிள்ளைகளுக்கு சொல்லுத்தந்தும், அவ்வாறே வாழவும் முயற்சி செய்யும் போது ‘இது என்ன விளையாட்டு?’ என தோன்றினாலும் தவறில்லை. அதற்கான விடையும் அந்த கதையிலேயே கிடைத்துவிடுகிறது. இதைவிட முக்கியமான ஒன்று, கதை சொல்வதும் கேட்பதும் அலாதியானது. ஆனால் பலரால் (பெரும்பாலான பெரியவர்களாலும், சில குழந்தைகளாலும்) தங்களின் கற்பனையினை பெரிதாக்கி அற்புதமான கதைகளை அளிக்க இயலுவதில்லை. இதற்கு முக்கியமான காரணம் அவர்களால் நிஜத்தை ஒட்டியும், நீதி போதனைகளுடனும், ஏதேனும் ஒரு கருத்தை முன்னிருத்தியுமே கதைகளை உருவாக்க முடிகிறது. இந்த ‘கதை சொல்லி’ கதையின் நாயகர்கள் விளையாடும் விளையாட்டை நாம் விளையாட முயற்சித்தால் நம் கற்பனை உலகம் விரிந்து அருமையான கதை சொல்லிகளாக முடியும். இதை ஒரு குழு விளையாட்டாக விளையாடும் பட்சத்தில் பல கதைகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். எங்கள் வீட்டின் இரவு நேர விளையாட்டில் இதுவும் இப்போது சேர்ந்துக்கொண்டது.

 ( (2) ரஷ்ய நாட்டு ஓவியர் ரசோவ்-ஐ பற்றிய குறிப்பும், அவரின் படங்களும். பெரியவர்களுக்குத்தான் பிற உயிரனங்கள் வேறானவை. குழந்தைகளுக்கோ அவை தம்மைப் போன்றவைதான். செல்லப்பிராணிகள் உள்ள வீடுகளில் அவைகளுக்கு அழகான உடைகள் அணிவிப்பதைப் பார்க்க முடிகிறது.  அதை விடவும் அழகு ரசோவின் ஓவியங்கள். ஒரு இயல்பான மனிதனைப் போன்ற சித்திரமாக இருப்பது குழந்தகளுக்கு மிகவும் நெருக்கத்தையும் அன்பையும் விதைப்பதாக உள்ளது. குழந்தை உள்ளம் கொண்ட பெரியவர்களுக்கும் தான். இந்த சித்திரங்கள் மிகவும் பிரபலமான Hobbesஐ நினைவுப்படுத்துவதாக உள்ளது.

    (3)  ரஷ்ய சிறார் இலக்கியமானது கதைகள், ஓவியங்களைத் தாண்டி அறிவியல் சார்ந்த புத்தகங்களை வழங்கியுள்ளது. இந்த இதழ் அவற்றுள் சிலவற்றை அறிமுகப்படுத்தி அவற்றைத் தேடும் எண்ணத்தைத் தூண்டுகிறது. நான் Raduga Publishers குறித்து google செய்தேன்.

 ( (4) அனைத்து பக்கங்களிலும் அருமையான படங்கள். பிள்ளைகள் வரைந்துப் பார்த்து மகிழும்படியாக உள்ளன.

  (5) பொதுவகவே ரஷ்ய இலக்கியத்தில் குழந்தைகளுக்கான கதைகள் ஒரு விதமான சாகசங்கள் கொண்டதாகவே இருக்கும். நம் ஊர் கதைகள் போல இல்லாமல். பல இடங்களில் ஆச்சரியமாகவும், நம்பகத்தன்மை இல்லாதது போன்றும் தெரியும். இருந்தும் குழந்தைகளின் பார்வையிலிருந்து படிக்கும் போது அவர்களின் தினசரி அப்படி அமையவே குழந்தைகள் விரும்புகின்றனர். அது போன்ற கதைகளும் இந்த இதழில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பெற்றோர்களும், பிள்ளைகளும் சேர்ந்து வாசிக்க வேண்டிய இதழ்! பிள்ளைகளுக்கு ரஷ்ய இலக்கித்திறக்கான திறவுகோல் இது!

Monday, May 2, 2022

மணல்மகுடி, நாடகநிலம் - ஒரு அனுபவம்

மணல்மகுடி என்ற நாடகக்குழு என் வசிப்பிடத்திலிருந்து 90 கி.மீ. தொலைவில் உள்ள கோவில்பட்டியில் இருப்பதும், அவர்கள் கடந்த வாரம் சனிக்கிழமை (30.04.2022) அன்று "குட்டி இளவரசன்" என்ற புத்தகத்தினை சில்க் ரூட் என்ற நாடகக் குழுவுடன் இணைத்து நாடக வடிவத்தில் வழங்கப்போவதையும் அறிந்த பிறகு அங்கு செல்லாமல்  இருக்க இயலவில்லை. 

முதல் காரணம் "குட்டி இளவரசன்" என் மனதுக்கு மிக மிக நெருக்கமான புத்தகம். என் வாழ்க்கையின் மிக முக்கியமான நபர்களுக்கு இந்த புத்தகத்தை பரிசாக அளித்துள்ளேன். அவ்வளவு நெருக்கமான இந்த கதையை நாடகமாக பார்க்கப் போகிறோம் என்ற குதூகலம் தொற்றிக்கொண்டது. சற்று நேரத்தில் இந்த கதையை எவ்வாறு நாடகமாக மாற்ற இயலும் என்ற கேள்வி மலையாக எழுந்தது. இது இரண்டாவது காரணம். மூன்றாவது, எங்கள் மகள் பார்க்கும் முதல் நாடகம் "குட்டி இளவரசன்" என்பது ஒரு வகையான - சரியான வார்த்தை கிடைக்கவில்லை - மன நிறைவை, சந்தோஷத்தை, நெகிழ்வைத் தந்தது. எங்களுக்குமே நாடகங்கள் பார்த்த அனுபவங்கள் சொல்லும் அளவுக்கு இல்லை. இதனுடன் சேர்ந்து மற்ற சில சின்ன சின்ன காரணங்களால் இந்த நாடகத்துக்கு செல்வது என்று முடிவு செய்யப்பட்டு மூவரும் சென்றோம். 

எப்போதும் போல் கூகுள் கடைசி நேரத்தில் சொதப்புவது போல் தோன்றியது. பலரை விசாரித்த போது யாருக்கும் அவ்வாறான இடத்தினைப் பற்றி தகவல் தெரியவில்லை. மீண்டும் கூகுளை நம்பி சென்ற போது ஒரு முட்டுச்சந்தில் நிறுத்தியது. முட்டிய இடம் ஒரு ரயில் பாதை. இரு இளைஞர்கள் இடத்தைக் காட்டினர். ரயில் பாதையை ஒட்டி நடந்து சென்று இடத்தை அடைந்தோம். மணல்மகுடி எங்கும் அழகான சுவர் ஓவியங்கள். கலை நயமிக்க பொருட்கள் என வசீகரமாக இருந்தது. 

நாடகம் நடத்தப்படவிருக்கும் இடம் நேர்த்தியாக அமைக்கப்பெற்று, பார்வையாளர்களுக்கு கேலரி போன்ற அமைப்பு இருந்தது. மரங்கள் சூழ இருந்த இடத்தை பார்த்தவுடன் குழந்தைகளுக்கும் பெரியவர்களிக்கும் ஒன்று போல ஒரு உற்சாகம் பிறக்கும். நானும் என் மகளும் சுற்றிப்பார்த்து மகிழ்ந்தோம். மாலை 6.30க்கு துவங்க வேண்டிய நாடகம் 7.00 மணிக்கு துவங்கியது. துவங்கிய பின்பே தெரிந்தது இருவர் மட்டுமே நடிக்கவுள்ளனர் என்று. இரு பெண்களும் நன்கு பரிச்சயப்பட்ட சினிமா, தொலைக்காட்சி முகங்கள். நடிப்பு , பாவைக் கூத்து, பொம்மலாட்டம் என்று வெவ்வேறு வடிவத்தில், பல பொருட்கள் கொண்டு, தங்களின் கதாபாத்திரங்களை ஒருவரோடொருவர் மாற்றிக்கொண்டு அசத்தி, 'குட்டி இளவரசன்' நம்மோடு இருப்பது போன்றே உணர வைத்தனர். புத்தகத்தை மீண்டும் கண்முன் நிறுத்தினர். நாம் நமக்குள் அவ்வப்போது தொலைத்துவிடும் குழந்தையை மீட்க உதவினர். நம் பிள்ளைகளை நாம் பார்க்கும் பார்வையில் உள்ள தவறுகளை நினைவுறுத்தினர். 'சே, நம்ம பொண்ணும் ஒரு குட்டி இளவரசினு மறந்திடுறோமே' எனவும் 'நாம ஏன் குட்டி இளவரசன் மாதிரி இருக்க மறந்திடிறோம்' எனவும் தோன்றியவாறே இருந்தது.


அந்த புத்தகத்தை வாசித்த போதே அது ஒரு கதை என நான் நம்ப மறுத்தேன். என்னைப் பொருத்தவரை அது நிஜம். முழுக்க முழுக்க நிஜம் என நம்பினேன். அந்த குட்டி இளவரசன் இப்போது கூட எங்கோ ஏதோவொரு கிரகத்தில் யாருடனோ உரையாடிக் கொண்டுதான் இருப்பான். அவன் என்றும் வளராத 'குட்டி இளவரசனா'கவே இருப்பான். நமக்குள் இருக்கும் நம்மைப் போன்று! 

மணல்மகுடியுடன் துவங்கியிள்ள இந்த உறவு நீண்ட காலம் நீடிக்கக்கூடியது! 💗


Sunday, May 1, 2022

Individual vs Team sport

Thanks to Covid and eventual intrusion of mobiles into lives of children! This has distanced them from grounds, parks and plays. However, schools are now reopened for full-fledged classes and therefore playing with peer group is back!! 

This aside, Olympics Tokyo 2020 attracted more viewers due to Covid and children & adults glued themselves to television sets and got introduced to many sports. That was a never before number of viewers as most of us were forced to remain indoors. 

As a positive effect, Olympics have made more parents and children think of sport as an option for career. Interestingly, the fame and money attached made it more possible. Predominantly, individual sports!!!! No doubt, the couple of medals grabbed by Indians were motivating! 

Absolutely fine! Be it an individual sport or a team one, children being involved in any kind is a welcoming thing. It gives them a sense of discipline and independence. Any sport gives the child a 'me time' besides their routine academic works. They do make new friends and socialize more. Effortlessly, sports prevent any other distraction a child is likely to get into. Health of the child is taken care of in its own way.  There is no way of pointing out a single negative thing about involving a child in sport. Playground is the place where one could see the real child - all facets!!!!

Despite these advantages existing in both individual and team sports, the primary choice of majority of parents remains 'individual sporting events.' There are quite a number of reasons for one to choose so  - primarily personal interest, one's physique, its sole dependence on the individual's ability and practice, limelight, availability and accessibility of the coach. There is a common belief that 'to train a child in an individual sport is easier and the returns are higher in relative terms.' Also parents now begin to think of sporting events that have less competition on ground to make it easier for them to train kids towards achievement of national, international recognition or so.This has led parents to plunge into Chess, Badminton, Tennis, and even Shooting. 

 More than half of Indian parents don't allow children to play outside

Picture Courtesy: The Week

Though this is not an unwelcoming thing, considering the fact that children are slowly forgetting how to socialize, there is a desperate need to include them in a team sport.  No matter how rich/poor we are, none of us can ever live in isolation or just stick to 'our type of people.' If we happen to be someone dreaming about a better and peaceful world, it certainly starts with our children being in a team. Not necessarily a serious, career oriented sport activity. Yet, being with one. 

It is visible that children find it difficult to be in a team, however small or big it is. The habit of complaining, bullying and cornering have become habitual and common everywhere. To be a part of a group, sharing while playing, acceptance of winning/losing, giving a hand to a teammate or an opponent is all part of a team sport which is thoroughly fading enough. Even when a child is in a team, he or she makes sure (or the parents make sure) that they outshine others and prove to be an independent winner in a group sport. It is very common to see children fighting with their own teammates to be felt seen and finally end up losing as a team. Schools also find it easier to conduct individual events rather than team events. 

There would be a regretting stage in our lives if we do not let our children be a team player, no matter how good they are at an individual sport! A playground and teams on field are just a replica of our social lives and the former make the latter better and joyous! 💗