இந்தப் பதிவு கொஞ்சம் தாமதமாக வருகிறது.
“அம்மா, இந்த வாரம் நிறைய விடுமுறை இருக்குமா,
ஜாலி,” என்றாள் என் மகள்.
“ஆமாம் பாப்பா. வெள்ளி, சனி, ஞாயிறு மூணு நாள்
இருக்கு,” என்றேன்.
“வெள்ளிக்கிழமை என்ன விசேஷம் ம்மா?”
“Good Friday பாப்பா,” என்றேன்.
சற்று நேர அமைதிக்குப் பின்பு;
“அப்போ மத்த Fridays எல்லாம் Bad Fridayவா?”
என்றாள் சிரிப்போடு.
“அப்படி இல்ல,. அந்த நாள் Christians க்கு முக்கியமான
நாள்,” என்றேன்.
“என்ன முக்கியமான நாள்?”
“அந்த நாள் தான் Jesusஅ சிலுவையில ஆணி வெச்சு
அடிச்சிட்டாங்க அவர் அன்னைக்கு இறந்து போய் மூணாவது நாள் திரும்ப உயிரோடு வந்தாரு,”
என்றேன்.
“ஒருத்தர் செத்துப் போயிட்டாரு, இல்ல எல்லாரும்
சேந்து கொண்ணுட்டாங்க. அது எப்படி Good Friday வா இருக்க முடியும்?”
-------
No comments:
Post a Comment