Wednesday, November 1, 2023

யாருய்யா நீங்கலாம்! - "மாறா"

🎼வானத்துக்கும் மேகத்துக்கும் ஊடே உள்ள வீடொன்றில்; யாரும் வந்து ஆடிப்போகும் ஊஞ்சல் வைத்த என் முன்றில்🎼

 

🎼அலைவார் அவர் எல்லாம் தொலைவார்; வசனம் தவறு! அலைவார் அவர் தானே அடைவார்; அவர் அடையும் புதையல் பெரிது 🎼

 

🎼அருகினில் நானிருந்தேன், தொலைவினில் நீ இருந்தாய்; இரு கை நீட்டுகிறேன் எதிரினில் வாராய் 🎼

 

🎼துழாவித் தேடி கண்ணின் முன்பு கொண்டு வந்து காட்டும்🎼

 

🎼அடங்காத நாடோடிக் காற்றல்லவா 🎼

 

 🎼ஒரு வீடு பரிவோடு வரவேற்க நீளும் போது, அதனோடு உரையாடு, அது போல் ஒரு வரம் ஏது🎼

 

🎼பெரிய பெரிய மலையெல்லாம் தாண்டி, கடல் தாண்டி....ரொம்ப தூரம் போகப்போறேன்🎼

 

🎼போகும் போக்கில் போர்வை போர்த்தும் பூந்தென்றல்🎼

 

🎼இவ்ளோ அழகான பொன்னு 'மாறா'வ தேடுறானு மாறாவுக்கு தெரியுமா🎼

 

🎼முகவரிகள் இல்லா ஒரு முதல் கடிதமாய்🎼

 

🎼ஏழா......ம் மலையும் கடலும் தாண்டி🎼

 

🎼பேச வேண்டும் எவரும் அறியா மொழிகள்🎼


 எழுதிட்டே போகலாம்........ இப்படி மனச போட்டு ஒரு வழிப்பண்ற பாடல் வரிகள், வசனமெல்லாம் இப்போ அரிதான மாதிரி இருக்கு. ரொம்ப நாளைக்குப் பிறகு தமிழ் திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களும் விருப்பமானதாக அமைந்தது "மாறா"வில் தான். 

 Actor R Madhavan- Actress Shraddha Srinath starrer “Maara” - Moviewingz.com

நம் மன நிலைக்கு ஏற்ப பாடல் வரிகளும் மாறுகிறது. 

சந்தோஷத்தில் கேட்டால் புன்னகைக்கவும், 

சோர்வாக இருக்கையில் உற்சாகம் அடையவும், 

சோகத்தில் கேட்டால் மனம் விட்டு கண்ணீர் விடவும் செய்கிறது. 

பார்க்கவும் அழகோ அழகு தான்! 😘

யாருப்பா நீங்க எல்லாம்'னு ஜிப்ரான் அவர்களையும், தாமரை அவர்களையும், தொடர்புடைய மற்ற கலைஞர்களையும் கேட்கத்தோணுது!!!! 😍💕💖💗

Tuesday, October 31, 2023

Tamil Nadu and Drugs: A dangerous road 😕

Tamil Nadu has been excited about the latest movie release of actor Vijay. The expectation, hype and excitement seemed to do more with LCU aka Lokesh (Kanagaraj's) Cinematic Universe. For those who knew nothing about LCU, here is a briefing: Lokesh (the director) in his movie titled "Kaithi" dealt with drugs and a huge drug bust in a metropolitan city of Tamil Nadu and in the climax he hinted audience that it was to be continued. Since then, he has been connecting dots from one movie of his to another and it is one universe (all to do with drugs and gangsters and guns and violence and killings and so on and so forth) where drug busting is the epicentre. That's LCU! Movie lovers, media and the whole public have gone gaga over LCU.

Expectations LCU" | Movies, Movie posters, Poster

On the other hand, Tamil Nadu government has been directing educational institutions across the state for almost a year now to conduct regular checks on drug abuse and insisting to create awareness among youngsters on (negative) effects of drug (ab)use. It has gone to a level where every school/college is expected to conduct at least one awareness programme per month. The Government of Tamil Nadu calls it to be an initiative towards "drug-free" society. Apparently, it is a welcome move. Yet, it raises doubts and concerns if drugs are already readily available in our society and that has forced to implement such drug awareness programmes.

 Interview: On why Tamil Nadu has adopted multi-pronged strategy to counter  the drug menace - The South First

Looking at the above two scenarios, there is a question - Are movies reflecting the current state of Tamil Nadu as far as drugs are concerned? or Are the movies instigating the flow of drugs in the society by hyping it and confusing the audience in understanding heroes and villains in such drug-based movies? In fact, villains of LCU are loved more by the audience.😓😮 A side effect of this whole thing is culture of 'celebrating violence and villainous lead characters.'

Though it is true that any art would reflect what it observes around; it shouldn't turn out to be the other way round for God's sake!! In this case, I am not sure which triggers the other! 😒

Wednesday, October 25, 2023

புத்தகக் கொலு 💖💖💖

கிடைக்கும் வாய்ப்பில் எல்லாம் புத்தக வாசிப்பினை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஆர்வக்கோளாறினால் இந்த நவராத்திரியில் கொலுவில் ஏன் பொம்மைகளுக்கு பதிலாக புத்தகங்களை வைத்து, இதை பார்ப்பவர்களுக்கு புத்தக வாசிப்பின் அவசியத்தினை விழிப்புணர்வாக வழங்கக்கூடாது என தோன்றி புத்தகக் கொலு வைக்கலாம் என்ற எண்ணம் உதித்தது. வீட்டில் வைத்தால் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் மட்டுமே பார்க்க இயலும் (வீடு இருக்கும் இடத்தின் தனிமையினால்). எங்கள் நூலகத்தில் வைத்தால்? அங்கும் அதே நிலைமை தான். ஆனால் ஏற்கனவே புத்தகங்கள் உள்ள இடம் தானே அது என்று எண்ணி நூலகத்தில் வேண்டாம் என்று நினைத்து, அலுவலத்தில் வைத்தால் என்ன என தோன்றிற்று. அலுவலகத்தில் அனைவரும் இதை வரவேற்று ஆளுக்கொரு பொருப்பினை எடுத்துக்கொள்ள முன்வந்தனர் (அவர்கள் அனைவருமே கல்லூரியின் அலுவலகப்பணியாளர்கள் என்பதை நினைவில் கொள்க!)

இதற்கிடையில்: இந்த மாத துவக்கத்தில் 50 வருட பழமையான எங்கள் கல்லூரியில் புத்தக திறனாய்வு எதுவும் இதுவரை நடைபெற்றதில்லை என்பதை அறிந்து வேதனையுடன், ஒவ்வொரு மாதமும் நான் ஒரு புத்தகத்தை எங்கள் கல்லூரி மாணவிகளுக்கு அறிமுகப்படுத்துகிறேன் என முன்வந்து, உரிய அதிகாரியின் அனுமதியுடன் 40 நிமிடத்திற்கு ஒரு புத்தககத்தை (பெண்களின் ஆடை: வரலாறும், அரசியலும்) அறிமுகம் செய்தேன். மாணவிகளின் மத்தியில் பெரும் மகிழ்ச்சி, மற்றும் வரவேற்பு. எனினும் ஆசிரியர்கள் குவிந்துள்ள ஒரு இடத்தில் ஒரு அலுவலகப் பணியாளராகிய நான் இந்த முன்னெடுப்பை எடுத்ததில் ஒரு அரசு அலுவலகத்திற்கே உண்டான சலசலப்பு இருந்ததாக புத்தகக்கொலு வைக்கவிருந்த நாளுக்கு இரண்டு நாள் முன்பு கேள்விப்பட்டு புத்தகக்கொலு எண்ணத்தை கைவிட நினைத்தேன்.

இம்மாதிரி சலசலப்புகள் நாம் செய்ய நினைக்கும் நற்காரியங்களுக்கு தடையாக இருக்கக்கூடாது என என் சக பணியாளர்கள் (அனைவரும் அலுவலகப்பணியாளர்களே!) தொடர்ந்து ஊக்குவித்தனர். நமக்குள் நாம் நன்மையினை தொடர்ந்து செய்வோம் என முடிவு செய்தோம். அதன் விளைவே 20.10.2023 வெள்ளி அன்று எங்கள் அலுவலகத்தில் உள்ள சிறிய இடத்தில் கல்லூரி முதல்வரின் ஒப்புதலுடன் நடைபெற்ற புத்தகக்கொலு. 🙌

கொலு வைக்கும் படிக்கட்டுகளின் விலை அதிகமாக இருந்த காரணத்தினால் என்ன செய்வதென்றி தெரியாமல் நின்றோம். ஒரு நாள் மட்டுமே இடையில் இருந்தது. பின்னர் ஆண்டுதோறும் கொலு வைக்கும் நபர் எவரெனும் இந்த ஆண்டு வைக்காமல் இருந்தால், கொலு படிக்கட்டுகளை பெறுவோம் என முடிவு செய்து, அவ்வாறு ஒருவரை கண்டுபிடித்து, படிக்கட்டுகளை பெற்றோம். அதனை வழங்கியவர் தங்கள் குடும்பத்தில் சிலருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் இவ்வாண்டு வைக்க இயலவில்லை எனவும், அவர்களின் கொலு படிக்கட்டுகள் இவ்வாண்டும் தொடந்து பயன்படுவதே மிக்க மகிழ்ச்சி எனவும் தெரிவித்து வழங்கினார். அதனை எங்களுக்கு தெரிந்தவரை தப்பும் தவறுதலுமாக அமைத்து முடித்தோம்.

ஐம்பது புத்தகத்தினையேனும் அறிமுகப்படுத்த வேண்டும் - வெவ்வேறு எழுத்தாளருடையது - என எண்ணி, ஒவ்வொரு படிக்கட்டும் ஒரு பிரிவாக அமைக்க முடிவு செய்தோம்.


 (1) சிறார் இலக்கியம்

(2) பெண்ணியம் சார்ந்த நூல்கள்

(3) கல்வி சார்ந்த நூல்கள்

(4) இயற்கை, சூழலியல் சார்ந்த நூல்கள்

(5) மொழிபெயர்ப்பு நூல்கள் (பிற மொழிகளில் பெரிதும் கவனத்தை ஈர்த்தவை)

(6) சமகால தமிழ் இலக்கியவாதிகளின் நூல்கள்

(7) விரும்பி யாரேனும் வைக்க நினைக்கும் அவர்களின் விருப்பமான நூல்கள் (எங்கள் கல்லூரி முதல்வர் இரு நூல்களை கொலுவிற்கு வழங்கினார்)

இவ்வாறு 80க்கும் குறைவில்லாத புத்தகங்களை அடுக்கி, சுற்றி பூவினாலும் அலங்கரித்தோம்.  

கொலுவிற்கு வருபவர்களுக்கு பரிசாக என்ன வழங்கலாம் என்று யோசிக்கையில், ஆளுக்கொரு புத்தகம் வழங்குவது சாத்தியமாகாது என எண்ணி, BOOK MARKS செய்து வழங்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம். அலுவலகப் பணியாளர் ஒருவரின் மகள் ஐம்பதுக்கும் மேற்பட்ட BOOK MARKS செய்துத்தந்தார் (ஒரே இரவில்). பின்னர் புத்தக வாசிப்பின் அற்புதத்தை விளக்கும் விதமாக ஆளுக்கொரு வாசிப்பின் மகத்துவத்தை உணர்த்தும் சீட்டினைத் தருவோம் என எண்ணி ஐம்பதினை தயார் செய்தோம். 😍

கொலு அன்று எங்கள் அனைவருக்கும் பெரிதாக ஏதோ சாதித்த மகிழ்ச்சி. இவ்வாறு ஒரு கொலு வைக்கப்பட்டுள்ளது என எந்த அறிவிப்பும் வழங்காமல் வாய்மொழியாக மட்டும் தெரிவித்து வருபவர்களை வரவேற்றோம். அலுவலகத்திற்குள் வந்து கொலுவினை ஒரு கண்டும் காணாமல் சென்ற ஆசிரியர்களும் உண்டு. பார்த்து வாழ்த்தியவர்களும் உண்டு. 50 சீட்டுகளில் 30 சீட்டுகள் மீதம் உள்ளது என்று நான் சொன்னால் கொலு பார்க்க வந்தவர்களின் எண்ணிக்கையை நீங்கள் கணக்கிட்டுக்கொள்ளலாம். 😆

எனினும் இதுவரை புத்தகங்கள் வாசிக்காத, வாசிக்கக்கிடைக்காத ஐவரேனும் கொலுவில் இருந்த புத்தகத்தினுள் தமக்கு பிடித்த புத்தகத்தினை எடுத்துச் சென்று வாசிக்கத் துவங்கினர்.💪

திருப்தியாக நாள் நிறைவடைந்தது. அதனினும் ஆச்சரியம், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் இன்ஸ்டாகிரம் (Instagram) பக்கத்தில் அன்று இரவு எங்கள் அலுவலகத்தின் கொலு இடம்பிடித்தது. இது எவ்வாறு அங்கு சேர்ந்தது என்பது எங்களுக்குப் புதிரே!  இப்பூவுலகில் நன்மை மட்டும் இவ்வாறு பரவட்டும்! 💖💖💖



Friday, October 20, 2023

Doosra Delivery: Yet another learning 😇

Despite having watched Cricket during the days of Muthiah Muralidharan and Saqlain Mushtaq, I did not equip myself with techniques or intricacies. Till I watched the video (link given below), I did not know there was something called "Doosra" delivery. Though it is not an illegal delivery, it seems to be highly impossible for a bowler to do it straight. That is the not the point here. 😆
 
https://www.youtube.com/shorts/vCjWXqNZ-8k (enjoy this less than one minute video)

Teams (Sri Lanka vs Pakistan) played against each other. Srilankan Team had won the series but were stunned by the unique delivery of balls from Saqlain. As Muralidharan mentions in this video, despite being opponents, despite Saqlain being younger in age, and despite having won the series, it did not stop the former to reach out to Saqlain and ask about his 'mesmering' (doosra) deliveries. 
 
There was no ego in it and so was with Saqlain when he willingly shared his 'unique' technique to one of his opponents. On top of it, Muralidharan confesses that it took him three years to deliver it to perfection. 
 
 Importance of Sports Essay | Health Benefits, Sports for Nation
 
Learning is a continuous process, irrespective of one's success or failure! And this process without EGO is wonderful to experience and to watch as well 😘 
 
Yet another lesson for life from the ground & legends themselves! 💗

Tuesday, October 17, 2023

தோழர் & Politics

Politics - அரசியல்

15ம் நூற்றாண்டு முதல் 'அரசியல்' என்ற வார்த்தை நடைமுறையில் உள்ளது. கிரேக்க மொழியிலிருந்து வந்த இந்த வார்த்தையின் தமிழாக்கமாக 'அரசியல்' என்ற வார்த்தையினை கொள்ளலாம். ஆங்கிலத்தில் Politics என்பதை Art or Science of Government என்று கூறப்படுகிறது. அரசின் அல்லது அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள், மக்களுக்கும் - ஆட்சி புரிபவர்களுக்குமான உறவு, மக்களுக்கான கொள்கையினை உருவாக்குதல், மக்களும், நாடும் செழிப்புடன் இருத்தல், அமைதியான சூழல் ஏற்படுத்துதல் என பல்வேறு பணிகளின் கூட்டு வார்த்தையாக 'அரசிய'லைக் குறிப்பிடலாம். அரசியல் நம் அனைவரின் வாழ்வுமுறை.

அரசியல் என்பது ஒரு கலை. ஒவ்வொரு இடத்துக்கும், ஊருக்கும், நாட்டுக்கும் வேறுபடக்கூடியது. அங்குள்ள மக்களுக்கு, சூழலுக்கு, பொருளாதாரத்திற்கு, சித்தாந்தத்திற்கு, இன்னும் பல காரணிகளுக்கு ஏற்றார்போல் அரசியல் மாறுபடும்.

அதே வேளையில் அரசியல் அறிவியலும் கூட. அதன் கட்டமைப்பு எங்கும் குடிமக்கள் தாம். சில பிரச்சனைகளுக்கு பொதுவான தீர்வும் உண்டு. அதன் மூலப்பொருட்கள் ஒன்று தான். மக்கள்-பொருளாதாரம்-கொள்கை, இதனைச் சுற்றியே அரசியலின் கிளைகள் எங்கும் செயல்படும்.

அரசியல் என்பது மனிதனின் மாபெரும் கண்டுபிடிப்பாகவே எனக்கு எப்போதும் தோன்றும். தன்னை ஒழுங்குப்படுத்திக்கொள்ள அல்லது தன் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளை எதிர்த்து தன்னை விடுவித்துக்கொள்ள அரசியல் தான் முதல் அறிவுசார் கருவி என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. தனக்கென்று ஒரு வரையறைக் கொண்டு, அதை ஆள்வதற்கு ஒரு முறையினைக் கொண்டு, அதில் வரும் இடர்களுக்கு வழிகளை கண்டடைந்து ஒரு நாட்டினை, உலகினை கொண்டு செல்லுதல் என்பது மனிதனின் பெரும் வெற்றியாக நான் காண்கிறேன்.

 தேர்தல் களம்: பெண்கள் ஏன் அரசியல் பேச வேண்டும்? | Election field -  hindutamil.in

அப்படிப்பட்ட "அரசியல்" என்ற வார்த்தையினை ஒரு 'கெட்ட' வார்த்தையாக பாவிக்க தொடங்கியது, மனிதனுக்கு அரசியலில் உள்ளவர்கள் மீது ஏமாற்றமும், கோபமும் வருவதினால் தான் என தோன்றுகிறது. நம் திரைப்படங்களும் "அரசியல் ஒரு சாக்கடை" என்று அடிக்கடி சொல்லி நம்மை நம்பவும் வைக்கிறது. அரசியல் எப்படி "சாக்கடை"யாகும்? அரசியல் என்ற ஒன்று இல்லாமல் போனால் கலவரமும், யுத்தமும் தானே மிஞ்சும்?! அரசியல் சரியாக உள்ளதா இல்லையா என்பது வேறு வாதம். ஆனால் அரசியல் இல்லாமல் இருத்தல் சாத்தியமில்லை.

அதே போல் 'அரசியல்' பண்ணுகிறார்கள் என்ற வார்த்தையும் மிக அதிகமாக பிரயோகிக்கப்படுகிறது. யாரேனும் சூழ்ச்சி செய்தால் இவ்வார்த்தை தான் முதலில் வருகிறது. தனக்குப் பின்னால் யாரேனும் ஏதேனும் செய்தாலோ, பிரித்தாழும் சூழ்ச்சி என்று நினைத்தாலோ, முன்னுக்குப்பின் முரணாக பேசினாலோ, மறைமுகமாக ஏதும் செய்தாலோ, ஒருவருக்கு தீங்கு நேரும் வண்ணம் ஏதும் செய்தாலோ, அவன்/அவள் அரசியல் செய்கிறாள் என சொல்லப்படுகிறது. மேற்குறிப்பிட்டவைக்கு நேரெதிராக நன்மை செய்யும் எந்த செயலும் "அரசியல்" என யாராலும் குறிப்பிடப்படுவதில்லை. அந்த நன்மைக்குள் ஏதோ 'அரசியல்' உண்டோ ('தீங்கு' உண்டோ) என மட்டுமே எண்ணுகின்றனர். 

அரசியலை மற்றுமொரு தொழிலாக (profession) பார்க்கும் பாங்கு இன்று நமக்கிடையில் இல்லை. அதை தீண்டத்தகாத ஒரு தொழிலாகவே பார்க்கின்றனர். சமகால அரசியலில் உள்ளவர்களால் அந்த எண்ணம் மக்களிடையே விரிவடைகிறது. அதனால் நம் குழந்தைகளுக்கும், இளையவர்களுக்கும் அரசியலை அறிமுகப்படுத்த தயங்குகிறோம். ஆனால் உண்மை என்னவெனில் அரசியல் இன்றி இங்கு எதுவும் இல்லை. அரசியல் ஒரு "நேர்மறை"யான வார்த்தை. 👍

தோழர் & Politics

தோழர் & Politics - இந்த இரண்டு வார்த்தைகளும் சமீபத்தில் என்னை சிந்திக்க வைத்தவை. இரண்டுமே 'நல்ல' வார்த்தைகள் தாம். ஏனோ சில நெருடல்கள் எனக்குள் எழுந்துள்ளன. அதை லேசாக பகிரும் பதிவு தான் இது.

தோழர்

என் சிறு வயதில் அடுத்த வீட்டில் வசித்த ஒரு அண்ணா, அக்கா தன்னைவிட வயதில் மூத்த என் அம்மாவை 'சகோ' என அழைத்தது தான் இவ்வாறான மாற்று வார்த்தை உண்டு என நான் அறிந்த நேரம். வினோதமாக இருக்கும். பின்னர் அன்பே சிவம் என்ற திரைப்படத்தில் இடதுசாரியினராகவும், முற்போக்கு சிந்தனைவாதிகளாகவும் இருந்த வீதி நாடகக் கலைஞர்கள் ஒருவரையொருவர் 'சகா' என அழைத்தது அந்த வயதில் தனித்துவமாகத் தெரிந்தது. மேற்படிப்பு நாட்களில் "தோழர்" என்ற வார்த்தையை நிறைய கேட்க/படிக்க நேரியது. ஏனோ இந்த வார்த்தை இடதுசாரி கட்சிகளுடையது என என் மனதில் பதிந்துவிட்டது. தற்போது சமூக செயற்பாட்டுகளில் இருக்கும் போது சிலர் நம்மை தோழர் என்று அழைப்பதுண்டு.  அது எனக்கு வினோதமாகவும், கூச்சத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். நாம் இடதுசாரி கட்சியை சேர்ந்தவரில்லை, நாத்திகவாதியும் இல்லை, முற்போக்கு இயக்கங்களிலும் இல்லை, சமூக செயற்பாட்டிற்காக முழு உழைப்பை போடுபவரும் இல்லை. இப்படி எந்த கட்டமைப்புக்குள் இல்லாதவராக இருந்தும் ஏன் ஒருவர் என்னை "தோழர்" என்று அழைக்கவேண்டும் என்ற கேள்வி எழுந்தது. ஒரு வேளை சே குவேரா அவர்கள் சொன்னது போல் சமூக கொடுமைகளை கண்டு ஆவேசம் கொள்வதால் நம்மையும் "தோழர்" என்று அழைக்கிறார்களோ?

 கலையகம்: #தோழர் - அரச அதிகாரத்தை அசைத்த பழந்தமிழ் வார்த்தை

அதனால் "தோழர்" என்ற வார்த்தையின் வரலாற்றினை தெரிந்து கொள்ள நினைத்தேன். ஃப்ரெஞ்ச் (French) நாட்டில் இருந்த மன்னர்களின், அதிகாரிகளின் அடைமொழிகளைக் (Titles) களைவதற்கு இது போன்ற வார்த்தைகள் முதலில் புழக்கத்தில் வந்துள்ளன. பின்னர் ரஷ்யாவில் புரட்சியின் போது "காம்ரேட்" (Comrade) என்ற வார்த்தை உருவாகியுள்ளது. இது போன்ற வார்த்தைகள் நாடுகளின் புரட்சிகளின் போது "காம்ரேட்" என்பதைத் தழுவி உருவாகி புழக்கத்தில் இருந்துவருகின்றன. அதன் ஒரு தழுவல் தான் "தோழர்" என்ற வார்த்தை. 

இவ்வார்த்தை தமிழ் இலக்கியங்களில் இருந்துள்ளது. 1000 வருடங்களாக இவ்வார்த்தை பயன்பாட்டில் உள்ளது என தெரிய வருகிறது. 'நட்பு' என்ற அர்த்தம் கொண்ட இந்த வார்த்தை தமிழக அரசியலில் பெரும் பங்கு வகித்துள்ளது. இவ்வார்த்தையினை முதன்முதலாக திரு.வி.க. அவர்கள் பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது. ஒரு அரசியல் பொற்பொழிவினை மொழிபெயர்க்கையில் இவ்வாறு உபயோகித்துள்ளார். பெரியார் அவர்களும் இவ்வார்த்தியினை களப்பணியாளர்கள், தலைமைகள் என அனைவரும் பயன்படுத்த வேண்டும் என கூறியிருக்கிறார். தன்னையும் தோழர் என்றே அழைக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார். தலைமைக்கும், தொண்டர்களுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லாமல் ஒரு கட்சி/ஒரு அமைப்பு செயல்பட வேண்டும் என எண்ணி அவ்வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டிருப்பது தெரியவருகிறது. அவ்வார்த்தைக்கு தனி மரியாதையும், பதவியில் உள்ளவர்களுக்கு ஒரு அச்சத்தினையும் ஏற்படுத்தக் கூடியதாக இருந்துள்ளதை வரலாறு தெரிவிக்கிறது. ஒரு இலக்கை நோக்கி பயணிக்கும் அனைவரும் (அனைத்து படிநிலையும்) சமம் என வெளிப்படையாக தெரிவிக்கும் ஒரு மாபெரும் கருவியாக "தோழர்" என்ற வார்த்தை பயன்படுகிறது என கற்றுக்கொண்டேன்.

இன்று இவ்வார்த்தை பொதுவெளியில் பயணிக்கும் பலரும் பயன்படுத்தும் வார்த்தையாக உள்ளது என தோன்றுகிறது. ஒருவரின் அடையாளம் என்ன, சித்தாந்தம் என்ன அறிந்து கொள்ளாமல், மேலோட்டமாக தெரிந்த நபரை "தோழர்" என்று அழைப்பது, மற்றொருவரை எவ்வாறு அழைப்பது என்ற குழப்பத்தில் "தோழர்" என குறிப்பிடுவது, அவ்வார்த்தியினை பயன்படுத்துவதில் ஒரு செல்வாக்கு உள்ளது என காட்டிக்கொள்ள பயன்படுத்துவது, செயற்கையாக பயன்படுத்துவது என இந்த வார்த்தையானது தன் வலிமையை இழக்கிறதோ என தோன்றுகிறது. இவ்வார்த்தையின் அர்த்தம் நீர்த்துப்போகிறதோ என எண்ணம் உண்டாகிறது. 

அவ்வார்த்தை வழக்கொழிந்து போய்விடக்கூடாது என்பதால் அதிகமாக பிரயோகிக்கப்படுகிறது என்ற வாதமும் இருக்கலாம். எங்கள் அளவில் நாங்கள் தோழர்களே என்ற வாதமும்  வைக்கலாம். எப்படியுமே அடுத்தவர் அவ்வாறு அழைக்கப்படுவதை விரும்புகிறாரா என்று தெரிந்துகொள்ளுதல் அவசியம் என்பது என் கருத்து. இவ்வார்த்தியின் வரலாறு இதன் வீரியத்தைக் காட்டுகிறது. அரசியலை ஆட்டிப்படைக்க வல்லமை கொண்ட வார்த்தை என புரிந்துகொள்ள முடிகிறது. அதனை குறைத்து எடைபோடும் எந்த தகுதியும் எனக்கில்லை. எனினும் நம்மோடு பழகுபவர் அனைவரும் நமக்கு "தோழமை" ஆகிவிட முடியாது என்ற அடிப்படை வாதத்தினைக் கொண்டு இவ்வார்த்தை பிரயோகிக்கப்பட்டால் நலம் என்பது என் புரிதல். அவ்வாறு நடத்தல் அவ்வார்த்தையின் வீரியத்தை தக்க வைக்கும் என தோன்றுகிறது. இதற்கு மாற்று சொல் இருந்தாலும் தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன். 💖

Monday, July 10, 2023

யாருக்கான முடிவை யார் எடுப்பது?😕

பெண்ணியம் பேசுபவர்களால் சமீப காலமாக அதிகம் பேசப்படும் விஷயமாக உள்ளது - "ஏன் இந்த சமூகத்தில் பெண்களுக்கான முடிவுகளை  பெண்களால் எடுக்க இயலுவதில்லை?"

இங்குமங்குமாக இந்நிலை மாறி வருகிறது என்றாலும், பெரும்பாலும் பெண்கள் தொடர்பான முடிவுகளை அவ்வீட்டு ஆண்கள் எடுப்பது வழக்கமாக உள்ளது. என்ன படிக்க வேண்டும், யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும், தன் வருமானத்தை எவ்வாறு செலவு செய்ய/சேமிக்க வேண்டும், யாருடன் பழக வேண்டும், எவ்வளவு நேரம் நண்பர்களுடன் நேரத்தை செலவிடலாம், யாரெல்லாம் நண்பர்களாக இருக்கலாம் என பல நிலைகளில் பெண்களுக்கான திட்டங்களை வகுப்பவர், முடிவுகளை எடுப்பவர் என ஆண்கள் உள்ளனர். இப்பொருள் தொடர்பான நிறைய கதைகள், கட்டுரைகள், திரைப்படங்கள், நாடகங்கள் சமீபகாலங்களில் வலம் வருகின்றன. இப்பேசு பொருள் எனக்கும் நெருக்கமானது என்பதால் அது தொடர்பாக கிடைப்பதை பார்ப்பதும், கேட்பதும் வழக்கம்தான். அப்படி சமீபத்தில் வாசித்த கட்டுரை ஷாலினி பிரியதர்ஷினியின் "மீட்சி-சித்திரம் 15" - நாடோடிச் சித்திரங்கள் என்ற புத்தகத்தில்.

 நாடோடிச் சித்திரங்கள்

இதிகாசங்களை விரும்பிப் படிப்பவள் அல்ல நான். சிறு வயதிலும் இதிகாசங்கள் பற்றிய கதைகளினை நிரம்ப கேட்டவளும் அல்ல. என்றாலும் கூட இராமயாணம் மற்றும் மகாபாரதம் இந்துக்களின் நடைமுறை வாழ்வியலுள் எப்படியேனும்  புகுந்துவிடக்கூடியது என்ற அளவில் இராமயாணம் மற்றும் மகாபாரதம் பரிச்சயம். மேற்குறிப்பிட்ட புத்தககத்தின் கட்டுரையில் இராமாயணத்தில் பெண்ணுக்காக ஆண் எடுக்கும் முடிவு குறித்தும் அதன் விளைவுக்குறித்துமான ஒரு கிளைக்கதை வாசிக்கக் கிடைத்தது. 

இராமயாணம் என்றால் இராமர் ('ர்' விகுதியில் எழுத வேண்டுமா என்ற குழப்பம் நெடு நேரம் எனக்கு இருந்தது), சீதை, லட்சுமனர், இராவணர், ஹனுமன், ஜடாயு போன்ற பெயர்களும், கதாபத்திரங்களும் தான் பிரபலம். கிளைக் கதைகளில் இன்னும் ஒரு சில பெயர்கள் தெரியவந்திருக்கும். அவ்வளவே. நான் ஊர்மிளை என்ற கதாபாத்திரத்தினை கேள்விப்பட்டதில்லை.

இராமயாணத்தில் வனவாசம் முடிந்து இராமன், சீதை, லட்சுமனன் ஆகியயோர் நாட்டுக்குத் திரும்பும் போது இராமருக்கும் சீதைக்கும் கிடைத்த வரவேற்பு லட்சுமனருக்கு கிட்டவில்லை என்பது வேறு கதை. ஆனால் அவரின் மனைவி ஊர்மிளை அவரைக் காண வெளியில் வரவில்லையாம். இவர் தன்  மனைவியை காண உள்ளே சென்றபோது கதவை அடைத்துக்கொண்டு அவரை காண விருப்பமில்லை எனவும் இனி என்றுமே அவருடன் வாழ விருப்பமில்லை எனவும் கூறியிருக்கிறார். சுற்றியுள்ள அனைவரும் ஒரு மனைவி தன் கணவரிடம் இவ்வாறு நடந்துக்கொள்வது தவறு என்று  கடிந்துள்ளனர். எனினும் தன் நிலைப்பாட்டிலிருந்து ஊர்மிளை சிறிதும் பிறழவில்லையாம்.

தான் இவ்வாறு நடந்துக்கொண்டதற்குக் காரணமாக அவர் சொன்னது தன் கணவர் காட்டுக்குச் செல்ல முடிவெடுத்தது வரை தவறில்லை. அது அவரின் வாழ்க்கை, அவரின் அண்ணன் மீது உள்ள மரியாதை. ஆனால் அவர் வனவாசம் செல்லும் போது தன் மனைவி எங்கு வசிக்க விரும்புகிறாள் என கேட்காமல் லட்சுமணரே ஊர்மிளை நான்கு சுவர்களுக்குள் இருக்க வேண்டும் என முடிவெடுத்து அதன்படியே நடந்துக் கொண்டது ஏற்கத்தக்கதல்ல என தெரிவித்துள்ளார்.  தனக்கான முடிவினை தன்னை கலந்தாலோசிகாமல் தனக்கு விருப்பமில்லாத பாதையை தேர்ந்தெடுத்து தன் வாழ்வின் 14 வருடங்களை சிரமத்துக்குள்ளாகியதைச் சுட்டிக்காட்டி தனக்கு தன் கணவருடன் இனி எந்த உறவுமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  

அத்தைரியம் இல்லாத ஊர்மிளைகள் நம்மிடையே அதிகம்.😟

Wednesday, July 5, 2023

இரு வேறு சம்பவங்கள் 😊

முதல் சம்பவம்

சுதந்திர போராட்டக்காலம். காந்தியடிகளை குமரப்பா அவர்கள் நிச்சயம் சந்திக்க வேண்டும் என பலர் கூறி வந்த நிலையில், அவர்களின் சந்திப்பு நிகழ்ந்தது. குமரப்பாவின் வாழ்க்கையை மாற்றியது. தன் பங்கினை சிறப்பாக செய்து வந்தார் குமரப்பா. ஒரு முறை பீகாரில் நில நடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நிவாரணத் தொகை தொடர்பான வேலையில் இருந்துள்ளார். அப்போது ஒரு நாள் காந்தியடிகள் குமரப்பாவை சந்திக்க பீகார் வந்துள்ளார். குமரப்பாவிற்கு அப்பணியை வழங்கிய இராஜேந்திர பிரசாத் அவர்கள் குமரப்பாவை சந்திக்க இயலாது என தெரிவித்துள்ளார். குமரப்பாவின் பணியின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்ட காந்தி  குமரப்பாவை தான் நாளை சந்திக்க வருவதாகக் கூறிச் சென்றுள்ளார். மறு நாள் காந்தி வந்த போது குமரப்பா தான் வேலையாக இருப்பதாகக் கூறி மறுநாள் வரும்படி கூறியுள்ளார். காந்தி, தான் அன்று இரவே ஊருக்கு செல்வதாகக் கூறியவுடன், தன்னை சந்திக்க வருவதை முன் கூட்டியே தன்னிடம் தெரிவித்திருக்க வேண்டும் எனவும், தனக்கு வேலை இல்லாமல் இருந்திருந்தால் தானே காந்தி அவர்களை சந்திக்க வந்திருப்பேன் எனவும் கூறி காந்தியடிகளை சந்திக்கவில்லை. காந்தியடிகளும் தான் சந்திக்க வந்த காரணத்தை எழுதி குமரப்பாவிடம் சேர்க்கும்படி தந்துவிட்டுச் சென்றுள்ளார். (நன்றி: டிராக்டர் சாணி போடுமா?)

டிராக்டர் சாணி போடுமா? - ஜே.சி.குமரப்பா - தன்னறம் | panuval.com

இரண்டாவது சம்பவம்

டேவிட் ஹாஸ்பக் (David Horsburg) என்பவர் 1972ல் கர்நாடகா மாநிலத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு  மாற்றுக்கல்வியனை தன் "நீல் பாக்" (Neel Bagh) என்ற பள்ளி மூலம் வழங்கி வந்தார். அவரின் பள்ளியின் பெருமையினை கேள்விப்பட்ட அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் ஒரு முறை கர்நாடக மாநிலம் சென்றிருந்தபோது தான் அந்த பள்ளியினை பார்வையிட விரும்பியுள்ளார். தன் ஆட்களை அனுப்பி தான் வரவிரும்பும் செய்தியினை டேவிட்டிடம் தெரிவித்துள்ளார். சிறிது யோசனைக்குப் பிறகு பிரதமர் அவர்களுக்கு தன்னால் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய இயலாது என்பதை அந்தச் செய்தி கொண்டு வந்தவர்களிடம் டேவிட் சொல்லி அனுப்பியுள்ளார். சில மணி நேரங்களுக்குப் பிறகு, தான் மட்டும் ஒரே ஒரு காரில் வருவதாகவும், அதிகபட்சம் இன்னொரு கார் மட்டும் வரும்படி தான் பார்த்துக்கொள்வதாகக் கூறி தன் ஆட்களை இந்திரா காந்தி அவர்கள் அனுப்பிவைத்துள்ளார். தன் பள்ளிக்கு பிரதமர் வந்து சென்றால் தேவையற்ற விளம்பரமாகும் என்று கருதியும், வருகைக்குப்பின் அவ்விடம் ஒரு சுற்றுலா தலமாகக்கூடும் என கருதியும் அவர்கள் வருவதை டேவிட் அனுமதிக்கவில்லை. பிரதமரும் டெல்லி சென்றுவிட்டார். எனினும் பிரதமர் தன் அலுவலகம் மூலமும், கர்நாடக மாநிலத்தின் பல்வேறு அரசு அலுவலகங்கள் மூலமும் பல விதமான அழுத்தங்கள், இடர்பாடுகள் கொடுக்கப்பட்டதை டேவிட் உணர்ந்துள்ளார். பெரிய பதவிகளில் இருந்த அவரது நண்பர்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.  பிரதமரின் உத்தரவுகளை மீறி தங்களால் டேவிட் அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய இயலாதது குறித்தும் வருந்தியுள்ளனர். (நன்றி: PROJECT NOMAD)

Focus - 50 Years of Neel Bagh, started in Sep-1972 - SchoolScape 

தலைமை பண்பின் முற்றிலும் மாறுபட்ட உதாரணங்களாக இவ்விரு சம்பவங்களை பார்க்கிறேன். முதல் சம்பவத்தில் குமரப்பாவிற்கு இருந்த தெளிவும், துணிச்சலும் அதனை காந்தி அவர்கள் எடுத்துக்கொண்ட விதமும் இன்று காண்பதற்கரிது. இரண்டாம் நிகழ்வில் மற்றொருவர் இடத்திற்கு தான் வரவிரும்பியதை உரிய மரியாதையுடன் கேட்டனுப்பியது ஒரு புறம், அதை நிராகரித்த டேவிட் அவர்களின் தைரியம் ஆச்சரியத்தை அளிக்கிறது. அதன் பின்னர் நடந்தவை கசப்பானது என்பதும், அவை தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கு உகந்த பண்பில்லை என்பதும் மறுக்கயிலாது. 

'இல்லை', 'முடியாது' போன்ற வார்த்தைகளை நாம் சொல்லப் பழக வேண்டியது அவசியம். அதே போன்று அவ்வார்த்தகளை ஏற்றுக்கொள்ளவும் பெரிய கற்றலும் பக்குவமும் தேவைப்படுகிறது!!💖

Saturday, May 6, 2023

Wrestlers Protest! 💪💕

It is disheartening to find that government continues to turn its deaf ears to the protest of our wrestlers in Jantar Mantar, New Delhi. it is not new to us witnessing such indifference - recall farmers' protests in Delhi. 

  Wrestlers protest HIGHLIGHTS | WFI ex chief Brij Bhushan sexual harassment  case DCW Vinesh Phogat Bajrang Punia Delhi | India News – India TV

Sexual harassment is no joke. Women taking it up to the streets are not a routine to our eyes and takes a lot of courage to do so. This case is against the Wrestling Federation of India (WFI) President, Brij Bhushan Sharan Singh and it does not seem to be an easy walk for the protesters.

Yet, as a woman and mother, I take a handful of stories to pass it on to many. 

It is highly appreciable that male wrestlers have joined hands right from the beginning to stand with their female counterparts, come what may. Not everywhere one finds men unconditionally supporting their female colleagues. The allegation is proved or not, the first step is to listen and reiterate that they are with us. Bajrang Punia proves to be a real gentleman! 💖

The protest site is witnessing multiple donors donating food, water and the like. Most of them are said to be farmers! 💕 

Coaches from across have gathered to show their solidarity and this by all means boosts the confidence among women wrestlers.😇

Today's The Hindu (06.05.2023) mentioned about a supporter aged 15! Accompanied by his father who is a coach himself. It is a duty of parents to show both sides of a coin. At the tender age of 15, a boy, being a part of the protest against sexual harassment is truly commendable! Some good signs for future!👫

Above all, the protest site has also become the practicing field for everyone. The photographs show that there are many number of coaches, players of all ages and parents visiting everyday. There are youngsters admitting that this protest has a silver lining which is that they are able to get trained by their role-models and who they have always looked up to on television! 💪

This whole scenario is unfortunate. Yet, the stories we see, hear and read say a lot about being together during the hardest times and the magic in being one of the loud voices for the right cause!

Monday, April 17, 2023

தும்பி: இயன்ற உதவி புரிக! 💖

தமிழில் சிறுவர்களுக்கென இதழ்கள், புத்தகங்கள் தற்போது பெருக தொடங்கிவிட்டன. புத்தகக் கண்காட்சிகளில் இவற்றை நாம் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள முடிகின்றன. எனினும் குழந்தைகளின் கைகளுக்கு சென்று சேர வேண்டியவை ஏராளம்.

தும்பி!!!💖

 குக்கூ காட்டுப்பள்ளியின் சிறார் இதழ்!

இச்சிறார் இதழானது ஆறு வருட காலமாக அச்சிடப்பட்டு விற்பனையில் உள்ளது. மாதமொரு ஒரு இதழ் வீதம் தற்போது 60 இதழ்களைத் தாண்டி சிறார் படிப்புலகில் அழகினை கொண்டு சேர்த்து வருகின்றது. மாத இதழில் தாமதமானாலும் - பொருளாதார நெருக்கடி போன்ற காரணத்தினால் - எந்தவொரு இதழும் இதுவரை நிறுத்தப்பட்டதில்லை. 

  • ஒவ்வொரு இதழும் வண்ணத்தினால் நிறைந்தது
  • உலகத்தின் அனைத்து மூலையில் உள்ள கதைகளும் தேர்ந்தடுக்கப்பட்டு, மொழியாக்கம் செய்யப்பட்டு, இரு மொழிகளிலும் - தமிழ் மற்றும் ஆங்கிலம் - அச்சிடப்படுகின்றன
  • தாள்களின் தரம் மிக அருமையாகவும் சீராகவும் அமைக்கப்பெற்றுள்ளன
  • குழந்தைகளின் உலகை பெரியவர்கள் புரிந்துகொள்ள அவர்களுக்கான கதைகளும், கட்டுரைகளும் ஒவ்வொரு இதழிலும் கூடுதலாக இடம்பெறுகின்றன
  • தும்பி இதழ்களில் வரும் பிரார்த்தனைகளும், முன்னுரைகளும் முறையே நம் மனிதத்தையும், அறிவையும் நடத்திச்செல்கிறது.

பல வருடங்களாக தும்பி எங்கள் வீட்டில் ஒரு அங்கம். எங்கள் நூலகத்தில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த புத்தகம் 'தும்பி'. பரிசளிக்க அருமையான புத்தகம்.

இப்படிப்பட்ட பொக்கிஷம் தற்போது கடினமான நிதி போராட்டத்தில் உள்ளது மனதிற்கு வருத்தததைத் தருகிறது. இவ்விதழை தொடர்ந்து இயங்க வைக்கவேண்டியது எனது கடமையாகவும் தோன்றுகிறது. என் பங்கிற்காக என் மகள் படிக்கும் பள்ளிக்கு ஒரு வருட சந்தா எடுக்கவுள்ளேன். இதை வாசிக்கும் உங்கள் அனைவருக்கும் இதே கோரிக்கையை விடுக்கிறேன்.

உங்கள் குழந்தைகளுக்கோ, சொந்த பந்தங்களுக்கோ, நண்பர்கள் குழுவிற்கோ, ஏதோ ஒரு அரசு பள்ளிக்கோ 'தும்பி'யின் ஒரு வருட சந்தா எடுத்து அவர்களுக்கு உதவுமாறு வேண்டுகிறேன்.

இப்புத்தகம் உங்கள் அனைவருக்கும் நிச்சயம் உற்சாகத்தை தரும் என்பதற்கு நான் உத்திரவாதம். 

நேரடியாக தும்பி சந்தா செலுத்த gpay: 9843870059 வருட சந்தா: ரூ. 1000/-

Account No. 59510200000031 Bank of Baroda, Branch: Moolapalay am, Erode

IFSC: BARB0MOOLAP (fifth letter is Zero)

இவர்களை தொடர்பு கொள்ள இயலாவிட்டாலோ, நேரமின்மை காரணமாக இருந்தாலோ, என்னிடம் தெரிவிக்கவும். தங்களிடம் தொகையினை பெற்று சந்தா செலுத்திய விவரத்தினை தெரிவிக்கிறேன்.

உங்களில் சிலரேனும் சந்தா எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் உள்ளேன்.

நன்றி! 🙏 

பின்குறிப்பு: தும்பி இதழின் இந்த நெருக்கடியினை அவர்களின் வார்த்தைகளில் வாசிக்க : https://www.jeyamohan.in/181920/

Wednesday, February 8, 2023

Sorry state of PhD scholars!!!

If you are a supervisor of PhD scholars or likely to be one in the future, 

please inform your prospective candidates of an approximate (legal) financial commitment they are likely to indulge in as a result of registering for PhD. Give them a higher figure rather than keeping it low, taking into consideration of changing Universities' policies. Doing a PhD does involve money. This is a no-nonsense fact. If they seem to be feel the course expensive or not affordable, DO NOT TAKE THEM.

If you tell me that PhD is not meant only for affordable candidates and no research-oriented candidate can be denied higher education, then it is reasonable to expect that they crack one of many fellowships such as JRF and ICSSR fellowship. In this case, they become independent, affordable and earn due respect during the course of PhD. 

This being impossible coupled with poor financial status, it is the sincere duty of the supervisor not to take up the candidate and explain the same in a pragmatic manner.

There is no guarantee that every PhD candidate would land on a job right after completion. Therefore, any candidate who enters with an idea that they would be given a job after PhD must be aware that this is a myth and it is the role of the supervisor to dissect it in front of them.

This denial is not an anti-scholar or anti-research or anti-education move but more of creating a better research environment in the society. Having seats filled under a supervisor is no achievement but being transparent enough to expose the right things is!!!!

It is not possible for a prospective candidate to look through this as they get carried away with one of the highest degrees in the country. Thus, it becomes the responsibility of supervisors! The pride of a supervisor is being true to the discipline, research and the candidate and nothing more!!!!

Friday, January 27, 2023

Not connected, Yet connected - Jacinda Ardern

The days of COVID brought the name 'Jacinda Ardern' closer to many of us. During her two tenures as the Prime Minister of New Zealand, like all her counterparts across the world, she had to make rough political and policy decisions. Even when she had strong opposition from her own citizens, she was praised for her personality and some of her strong moves by the outside world. 

The country had a very low death rate due to her strong decision of keeping the borders closed and strict enforcement of COVID regulations within the country. It had affected the bottom workforce and unemployment issues had been raised later, yet her firm decision made the country safe from the deadly virus.

She is said to be the second woman ever in the entire world to bear child after assuming the top most position in the country. Delivering child and taking care did not stop her from attending high profile meetings such as the UN's carrying her child along. This became viral and portrayed to the world that 'glass ceilings' are worth  discussing every now and then. Becoming a mother herself, she brought in new maternity rules.

New Zealand Prime Minister Jacinda Ardern Is Officially Engaged

She vehemently made decisions towards eradication of tobacco, particularly among the youngsters who supposedly are the future of the country. 

Besides, she proved to be a loyal worker for the citizens at times of natural disaster (volcanic eruption) and man-made disaster (terrorist attack). Everywhere she reiterated the fact that she was one among the victims and she stood by them at those difficult times.

 Jacinda Ardern resigns: 7 defining characteristics of the New Zealand PM's  leadership style | Vogue India

It is never easy for a woman to hold a high position in the hierarchy and sustain without a strong fall. She withstood many with her head held high. Yet, her announcement on resigning and retiring came as a shock to many of us.   But it takes a lot of courage to publicly state her reason as she did; no men would be daring to the same. Quoting her 'There isn't enough in the tank,' - She admits that she could take only this much and would like to divert her energy on her marriage and kid which is universally common. 

Though there can be no man on earth to quit politics for family reasons, may be this is how women choose to live. Either to fight, sacrifice and withstand personal losses - like many women leaders we had witnessed - in a long run in politics or quit at some point in time and lead a (hopefully) peaceful life. 

I personally do not think that this action of hers could ever question the leadership of a woman. On contrary, it says women are stronger to make harder decisions! No matter what, Jacinda Ardern is truly an inspiration and a story to be told to our younger girls.  💝

PC: The Vogue

பெற்றோர்களே காரணம்

டோமோயி நூலகம் தொடங்கி ஒரு வருடமாகப் போகும் நிலையில், அடுத்த நூலகம் சார்ந்த பணி மந்த நிலையிலேயே உள்ளதை நினைத்து பல நாள் வீட்டில் உரையாடுவதுண்டு. அனைத்தும் சாத்தியமாவதில்லை என்ற நிதர்சனம் புரிந்து அடுத்த வேலையை கவனிக்கத்தொடங்குவோம்.

நூலகம் நிரந்தர கட்டடத்தில் வைக்க முடியாமல் போனால் என்ன? நாமே நடமாடும் நூலகமாக செயல்பட தொடங்குவோம் என முடிவு செய்தோம். உலகின் பல மூலைகளில் இம்மாதிரியான நடமாடும் நூலகங்கள் பல இருந்துள்ளன. இன்றும் உள்ளன. (Inspired by 'That Book Woman', 'The Bibbliburro')

அருகாமையில் உள்ள  வெள்ளாளங்குளம் என்ற கிராமத்திற்கு குடும்பசகிதமாக இரு மூட்டைகளை சுமந்து தெருக்களில் நடக்கத் தொடங்கினோம். அந்த ஊரில் தான் எங்களுக்கு பசும்பால் தரும் நபரின் வீடு உள்ளதால் அங்கிருந்து தொடங்குவோம் என எண்ணி அவர்கள் வீட்டில் உள்ள மூன்று பெண் குழந்தைகளுக்கு புத்தகங்களை அளித்தோம். ஒருத்தி மட்டும் அப்புத்தகத்தை தொடவே மாட்டேன் என உறுதியாக இருந்தாள். நான் படிக்க மாட்டேன், எனக்கு வேண்டவே வேண்டாம் என திடமாகக் கூறினாள். சரி என அந்த வீட்டின் ஒரு பிள்ளையைக் கூட்டிக் கொண்டு வீடு வீடாகச் செல்லத் துவங்கினோம்.

தெருவில் சில குழந்தைகள் ஆர்வமாக புத்தகங்களைப் பெற்றுக் கொண்டதுடன் தன் தோழர்களையும் கூப்பிட்டுவந்து புத்தகங்களைப் பெற்றுச் சென்றனர். சில தாய்மார்கள் இலவசமாகத்தான் என்றவுடன் பெற்றுக்கொள்ள சம்மதித்தனர். பெரும்பாலான பெற்றோர்கள் கூறிய ஒரே விஷயம், "எங்க வீட்டுப் பிள்ளைங்க வீட்டுப்பாடத்தையே படிக்க மாட்டேங்குதுங்க, இதுல எதுக்கு இந்த புக் எல்லாம்." மேற்கொண்டு பேசவே வாய்ப்பு தரப்படவில்லை. விரட்டி அடிக்காத குறை.

கதை புத்தகங்களை விரும்பிப் படிக்கும் குழந்தைகள் தங்களின் பள்ளிப்பாடங்களை சிறப்பாக படிக்க இயலும் என்ற உண்மையை அவர்களுக்கு எப்படி புரிய வைப்பது!!!!

சிரமம் தான். அதனால் தான் அந்த ஊர் பிள்ளைகளுடன் 'கோலி' விளையாடி நண்பர்களாக முயற்சி செய்கிறோம். நமக்கு எதுக்கு பெரியவங்களோட சகவாசம்! 😆

மின்மினி பூச்சிகள் 🐝

என் சிறு வயதில் மின்மினி பூச்சிகள் ஏராளமாக இருந்தன. நாங்கள் வசித்த தெருவில் மாலை, இரவு வேளைகளில் விளையாடும் போது மின்மினிகளும் சேர்ந்து கொள்...