தமிழில் சிறுவர்களுக்கென இதழ்கள், புத்தகங்கள் தற்போது பெருக தொடங்கிவிட்டன. புத்தகக் கண்காட்சிகளில் இவற்றை நாம் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள முடிகின்றன. எனினும் குழந்தைகளின் கைகளுக்கு சென்று சேர வேண்டியவை ஏராளம்.
தும்பி!!!💖
குக்கூ காட்டுப்பள்ளியின் சிறார் இதழ்!
இச்சிறார் இதழானது ஆறு வருட காலமாக அச்சிடப்பட்டு விற்பனையில் உள்ளது. மாதமொரு ஒரு இதழ் வீதம் தற்போது 60 இதழ்களைத் தாண்டி சிறார் படிப்புலகில் அழகினை கொண்டு சேர்த்து வருகின்றது. மாத இதழில் தாமதமானாலும் - பொருளாதார நெருக்கடி போன்ற காரணத்தினால் - எந்தவொரு இதழும் இதுவரை நிறுத்தப்பட்டதில்லை.
- ஒவ்வொரு இதழும் வண்ணத்தினால் நிறைந்தது
- உலகத்தின் அனைத்து மூலையில் உள்ள கதைகளும் தேர்ந்தடுக்கப்பட்டு, மொழியாக்கம் செய்யப்பட்டு, இரு மொழிகளிலும் - தமிழ் மற்றும் ஆங்கிலம் - அச்சிடப்படுகின்றன
- தாள்களின் தரம் மிக அருமையாகவும் சீராகவும் அமைக்கப்பெற்றுள்ளன
- குழந்தைகளின் உலகை பெரியவர்கள் புரிந்துகொள்ள அவர்களுக்கான கதைகளும், கட்டுரைகளும் ஒவ்வொரு இதழிலும் கூடுதலாக இடம்பெறுகின்றன
- தும்பி இதழ்களில் வரும் பிரார்த்தனைகளும், முன்னுரைகளும் முறையே நம் மனிதத்தையும், அறிவையும் நடத்திச்செல்கிறது.
பல வருடங்களாக தும்பி எங்கள் வீட்டில் ஒரு அங்கம். எங்கள் நூலகத்தில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த புத்தகம் 'தும்பி'. பரிசளிக்க அருமையான புத்தகம்.
இப்படிப்பட்ட பொக்கிஷம் தற்போது கடினமான நிதி போராட்டத்தில் உள்ளது மனதிற்கு வருத்தததைத் தருகிறது. இவ்விதழை தொடர்ந்து இயங்க வைக்கவேண்டியது எனது கடமையாகவும் தோன்றுகிறது. என் பங்கிற்காக என் மகள் படிக்கும் பள்ளிக்கு ஒரு வருட சந்தா எடுக்கவுள்ளேன். இதை வாசிக்கும் உங்கள் அனைவருக்கும் இதே கோரிக்கையை விடுக்கிறேன்.
உங்கள் குழந்தைகளுக்கோ, சொந்த பந்தங்களுக்கோ, நண்பர்கள் குழுவிற்கோ, ஏதோ ஒரு அரசு பள்ளிக்கோ 'தும்பி'யின் ஒரு வருட சந்தா எடுத்து அவர்களுக்கு உதவுமாறு வேண்டுகிறேன்.
இப்புத்தகம் உங்கள் அனைவருக்கும் நிச்சயம் உற்சாகத்தை தரும் என்பதற்கு நான் உத்திரவாதம்.
நேரடியாக தும்பி சந்தா செலுத்த gpay: 9843870059 வருட சந்தா: ரூ. 1000/-
Account No. 59510200000031 Bank of Baroda, Branch: Moolapalay am, Erode
IFSC: BARB0MOOLAP (fifth letter is Zero)
இவர்களை தொடர்பு கொள்ள இயலாவிட்டாலோ, நேரமின்மை காரணமாக இருந்தாலோ, என்னிடம் தெரிவிக்கவும். தங்களிடம் தொகையினை பெற்று சந்தா செலுத்திய விவரத்தினை தெரிவிக்கிறேன்.
உங்களில் சிலரேனும் சந்தா எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் உள்ளேன்.
நன்றி! 🙏
பின்குறிப்பு: தும்பி இதழின் இந்த நெருக்கடியினை அவர்களின் வார்த்தைகளில் வாசிக்க : https://www.jeyamohan.in/181920/
No comments:
Post a Comment