Thursday, August 21, 2025

பாப்ளர் மரத்திற்கு ஏன் அந்த பெயர் தெரியுமா?

தினமும் இரவில் கதை சொல்வது வழக்கம். சென்ற வாரத்தில் ஒரு இரவில் ஒரு இரஷ்ய நாட்டுக் கதையினை சொல்லத் தொடங்கினேன். கதையின் தொடக்கமாக

“ஒரு அழகான இரஷ்ய கிராமம். மலை அடிவாரத்தில் இருந்தது. அந்த மலையின் உச்சியில் உயரமான இரண்டு பாப்ளர் மரங்கள். அந்த கிராமத்தின் எந்த பக்கத்திலிருந்து பார்த்தாலும் அந்த இரண்டு பாப்ளர் மரங்கள் தெரியும். அந்த ஊருக்கே அடையாளமாக அம்மரங்கள் இருந்தன என்றும் கூட சொல்லலாம்,” என்றேன்.

உடனே என் மகள், “அதனால தான் அந்த பெயரா?” என்றாள்.

“என்ன பெயர்?” என்றேன்.

“பாப்ளர்,” என்றாள்.

“புரியல,” என்றேன்.

“இல்லம்மா, அந்த மரம் ஊருக்கே தெரியது, அடையாளமா இருக்கு. அப்போ அந்த மரம் popular தானே! அதான் அந்த மரத்துக்கு பாப்ளர்னு பெயர் வெச்சிருக்காங்க,” என்றாள்.

“Wow,” என்றேன்.😍🤩

No comments:

யாருடைய துகள் நாம்?

"சீதக்காதி" திரைப்படத்தில் வருவது போன்று "கலைக்கும் கலைஞனுக்கும் மரணமில்லை" தான். அதே போன்று நம் முன்னோர்களுக்கும் மரணமி...