ஒரு அரசு பள்ளியின் காலை வழிப்பாட்டின் போது நடந்த சம்பவம்
"மேடம், எனக்கு இவ்வளவு Homework கொடுத்தீங்க..... நான் அடுத்த வருஷம் வேறொரு schoolக்கு பொயிடுவேன்," என்றான் ஒரு ஒன்றாம் வகுப்பு மாணவன்.
"என்னடா சொல்ற?" என்றார் ஆசிரியர்.
"ஆமாம். எனக்கு நிறைய குடுக்குறீங்க," என்றான்.
"யாருடா அப்படி சொன்னது? அம்மாவா அப்பாவா?"
"இல்ல, நானே தான் முடிவு பண்ணேன்."
ஆசிரியருக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் தொற்றிக்கொள்ள பெற்றோரிடம் இதனைப் பற்றிக் கேட்டு தெளிவு பெற்றுள்ளார்.
மேற்குறிப்பிட்ட அனைத்தும் ஜனநாயக வகுப்பறைகளில் மட்டுமே சாத்தியம்.
அப்படியான ஜனநாயகத்தன்மை அரசுப்பள்ளியிலே உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்வு உள்ளது.
குழந்தையும் தான் நினைத்ததை பேச முடிகிறது. ஆசிரியர்களும் அதனை சரியாக உள்வாங்கும் தன்மையுடன் இருக்கின்றனர்.
google imagesஇதே சம்பவத்தை ஒரு தனியார் பள்ளியில் நினைத்துப்பார்த்தால், ஒரு ஒன்றாம் வகுப்பு மாணவனால் இதனை சொல்லவும் முடியாது; அப்படியே சொன்னாலும் அது ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளப்படாது என்பது தான் யதார்த்தம்.
No comments:
Post a Comment