நான் தொடக்கப் பள்ளியில் படித்த போது அமைச்சர்கள் பற்றியெல்லாம் தெரிந்ததில்லை. அந்த வயதில் கல்விக்கென்று அமைச்சர் உண்டு என்பதெல்லாம் அறியாத தகவல்.
இரண்டு நாட்களுக்கு முன் தூங்கி எழுந்தவுடன் எங்கள் மகள் "அம்மா, என் கனவில் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மாமா வந்தாங்க," என்று தயங்கியப்படியே சொன்னாள்.
"சூப்பர் பாப்பா," என்றோம்.
கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது. குழந்தைகளின் கனவில் சினிமா பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும் வருவதைப் பற்றியே கேட்டு வந்ததும், அப்படிப்பட்ட வயதையும் அனுபவத்தையுமே கடந்து வந்த எனக்கு இந்தக் கனவு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
கனவில் என்ன வந்தது என்று கேட்டோம். மகள் சொன்னாள். அதை இங்கு பதிவு செய்ய விரும்பவில்லை. ஏனெனில் கண்ட கனவு எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதனை கடிதமாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு எழுதச் சொல்லி இருக்கோம். அதனை அனுப்பியப் பிறகு இங்கு பதிவு செய்கிறேன்.
இம்மாதிரியான சம்பவங்கள் அரசு பள்ளியில் நடப்பதற்கான சாத்தியமே அதிகம். 💟 தங்களின் கல்விக்கான முடிவுகள் யார் கையில் உள்ளது என்பதை இத்தலைமுறை அறிந்து வைத்திருப்பது நல்மாற்றங்களுக்கான பாதை என்பதில் சந்தேகமில்லை. 💪
No comments:
Post a Comment