எங்களின் மகள் பிற குழந்தைகளைப் போன்று பல சுவாரஸ்யமான கேள்விகள், எடக்குமுடக்கானவை, ஆழமானவை என பலவாறு கேட்பதுண்டு. பெற்றோர்களாகிய நாங்கள் அவை பற்றி நிறைய பேசுவதுண்டு. ஆனால் இது வரை அக்கேள்விகளை எங்கும் எழுதி வைத்தது இல்லை. சிலவற்றையேனும் எழுதி வைக்க வேண்டும் அல்லது இம்மாதிரியான இடங்களில் பதிவு செய்து வைக்க வேண்டும் என தோன்றியுள்ளது.
அவ்வெண்ணத்தின் முதல் பதிவாக இன்று காலை எனக்கும் என் மகளுக்கும் இடையேயான உரையாடலின் ஒரு பகுதி. பள்ளி செல்லும் போது காரில் "கிட்டார் கம்பியின் மேலே நின்று" என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.
"இந்த பாட்டு உனக்கு பிடிக்குமா அம்மா?"
"கொஞ்சமா பிடிக்கும் பாப்பா."
"இந்த பாட்டுல டான்ஸ் ஆடுவாங்களா?"
"இல்ல. இருக்காது. இங்கயும் அங்கயும் நடந்திட்டிருப்பாங்க."
"அப்ப போர் தான்."
"ஆமா பாப்பா."
"எல்லா பாட்டுலேயும் girlsக்கு easyஆன steps தான் இருக்கும். இல்ல டான்ஸே இருக்காது. Boys க்கு தான் நல்ல steps இருக்கும் அம்மா."
"ஏன் பாப்பா அப்படி சொல்ற?"
"உனக்கு தெரியாதா? எல்லா பாட்டுலேயும் அப்படித்தான். Beastல வர பாட்டுல கொஞ்சம் பரவயில்ல. Don பாட்டுல அந்த அக்காக்கு ஒன்னுமே இருக்காது. இப்படி தான் எல்லா பாட்டுலேயும்."
"அப்படியா? சரியாதான் நீ சொல்றனு தோனுது பாப்பா. ஆனா ஏன் அப்படி girlsக்கு மட்டும் கொடுக்குறாங்கனு நினைக்கற?"
"தெரில. ஒரு வேளை Girlsக்கு நல்லா ஆட வராதுனு நினைக்கறாங்கனு நினைக்கிறேன்."
"உங்க Dance classல அப்படியா நடக்குது?"
"இல்லையே. நாங்க boys & girls ஒரே மாதிரியான steps தான் practice பண்ணி ஆடுவோம்."
குழந்தைகள் எதையும் கவனிக்க தவறுவதில்லை. அது தொடர்பாக கேள்விகள் கேட்க தயங்குவதில்லை. நாம் வெளிப்படையான அல்லது நேர்மையான பதில்கள் தருகிறோமா!!!! அங்கு தான் சிக்கல் தொடங்குகிறது.
3 comments:
அருமையான பதிவு மேம்... நானும் இனிமேல் இது போன்ற கேள்விகளைக் கவனிக்கப் போகிறேன்
👍
Not all songs some songs be like that
Post a Comment