Wednesday, March 27, 2024

ஆன் ஃப்ராங்க் - ஒரு இளம் பெண்ணின் நாட்குறிப்பு

எனது பிறந்தநாள் அன்று எனக்கு பிரியமான குழந்தைகளான ஜோஹன் மற்றும் ஹரிணி இப்புத்தகத்தை பரிசளித்தார்கள். ஏனோ எடுத்து வாசிக்கப்படாமலே இருந்தது. 'ஆண்ட்டி, அந்த புக் படிச்சீங்களா?' என கேட்டனர். இப்புத்தகம் 'ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு' போன்றது என்பதாலேயோ என்னவோ ஒரு தயக்கம். ஆனாலும் இப்போது முடித்துவிட்டேன்.

 Diary of a Young Girl (PREMIUM PAPERBACK, PENGUIN INDIA) - Penguin Random  House India

இராண்டாம் உலகப்போரிலிருந்தும், ஹிட்லரிடமிருந்தும் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஆன் ஃப்ராங்க் என்ற 12 வயது சிறுமியின் குடும்பம் வேறு இரு குடும்பங்களுடன் இரகசிய இருப்பிடத்தில் (ஆனின் வார்த்தைகளில் 'இணைப்பகத்தில்') சில 'ஜெர்மானிய' நண்பர்களின் உதவியால் தஞ்சம் அடைகிறார்கள். பதின் பருவத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஒரு சிறுமி தன் இயல்பு வாழ்க்கையை தொலைத்து நட்பு ஏதும் இல்லாமல் தனக்கு பரிசாக கிடைத்த ஒரு டைரியை தன் நட்பாகக் கொள்கிறாள். அதற்கு 'கிட்டி' என பெயர் சூட்டி தான் சொல்ல நினைக்கும் அனைத்தையும் அதில் எழுதுகிறாள்.

கோவிட் காலக்கட்டத்தில் வீட்டினுள் முடங்கிக் கிடந்ததை நாம் மறக்க மாட்டோம். எவ்வளவு கடினமாக இருந்தது என அறிவோம். அதைவிட பல மடங்கு சொல்லிலடங்கா துயரமானது போர் காலத்தின் இரகசிய வாழ்க்கை என்பதை இப்புத்தகத்தை வாசிக்கையில் உணரமுடியும். அதுவும் ஒரு சிறுமியின் பார்வையிலிருந்து.

மிக விரைவில் போர் முடிவுக்கு வரும் என்ற ஆசையுடன், எதிர்பார்ப்புடன் ஆன் வாழ்ந்து வருகிறாள். இணைப்பகத்தில் தினம் நடப்பவையை குறிப்பில் எழுதுகிறாள். அங்கு வசிக்கும் அனைவரும் தினம் சந்திக்கும் பிரச்சனைகள், சாப்பாட்டில் வரும் சண்டைகள், கழிப்பறை போராட்டங்கள், அமைதி காக்க வேண்டிய நேரங்கள், மனச்சிக்கல்கள், இடப்பற்றாக்குறை என பலவற்றையும் நம்மால் காணமுடிகிறது.

ஒரு குழந்தையின் உள்ளுணர்வை வெளிப்படையாக நம் முன் நிறுத்துகிறது. தன் தாயை ஆன் பல சமயங்களில் வெறுக்கிறாள். தந்தையின் மீது வெறுப்புணர்வு அதிகரிக்கிறது. தன் அக்காவுடன் இணைப்பகத்தினுள் பக்கத்தில் இருந்தும் கடித பரிமாற்றம் செய்து கொள்கிறாள். நேரில் பேச இயலாதவைக் கூட கடிதம் மூலம் சுலபமாக செய்யமுடிகிறது என நம்புகிறாள். அவ்வாறு தன் தந்தைக்கு வெளிப்படையாக ஒரு கடிதத்தினை எழுதி அவர் மனம் நோகும் போது குற்றவுணர்ச்சியில் உரைகிறாள்.  ஒரு சிறுமியை பெரியவர்கள் எவரும் புரிந்துகொள்ளவில்லை எனவும், அதற்கான முயற்சியைக் கூட எடுக்க முன்வருவதில்லை எனவும் கொதிக்கிறாள். ஓரிரு வருடத்தில் தன்னை இன்னும் ஒரு குழந்தையாகவே நினைத்து நடத்தப்படுவதை எதிர்க்கிறாள். நாம் குழந்தைகளை புரிந்துகொள்ள தவறுவதை ஆழமாக உணரவைக்கிறது. படிக்கும் பெரியவர்களுள் பெரும்பாலானவர்கள் குற்றவுணர்ச்சிக்கு தள்ளப்படுவதை தவிர்க்க முடியாது.

தன்னுள் தோன்றும் காதல், காமம் போன்ற 'சிக்கலான' ஆனால் 'இயற்கையான' பலவற்றையும் தன் டைரியில் குறித்துள்ளார். உலக நடப்புகள் பற்றி உதவ வரும் நண்பர்கள் மூலமும், வானொலி மூலமும் கேட்டறிந்துக் கொள்கின்றனர். இணைப்பகத்தில் உள்ள நாட்கள் ஏற்ற இறக்கம் நிறந்ததாகவே இருந்துள்ளன. உடலாலும், மனதாலும் பாதிக்கப்பட்ட வண்ணம் இருந்துள்ளனர். இதற்கிடையில் சிலரது மரண செய்திகள், திருட்டு மற்றும் கொள்ளைச் செய்திகளும், அனுபவங்களும் இவர்களை பயத்துடனே வைத்துள்ளது. மாட்டிக்கொள்வோமோ, கொல்லப்படுவோமோ என்ற அச்சம் அவ்வப்போது எழுகிறது.

இணைப்பகத்தில் உள்ளவர்களுக்கான மிகப்பெரிய பொழுதுபோக்கு புத்தகம் வாசிப்பது. ஏராளமான புத்தகங்கள் வாசிக்கப்படுகின்றன. ஆன், தான் என்ன புத்தகம் வாசிக்க வேண்டும் என பெரியவர்களால் சொல்லப்படுவதை விரும்புவதே இல்லை. அப்பகுதி நம் குழந்தைகளை நினைவூட்டுகிறது. ஆன் தன் டைரியில் உலக அரசியலை எழுதுகிறாள். அதனால் தன் வாழ்க்கையில் ஏற்படும் பொருளாதார சிக்கலையும், தினசரி உணவு பிரச்சனைகளையும் பதிவிடுகிறாள். பெரியவர்களின் அரசியல் நிலைப்பாட்டில் குறை காண்கிறாள். யாருக்கும் எந்த நன்மையும் தர இயலாத இந்த போரினை ஏன் பெரியவர்கள் நடத்துகிறார்கள் என ஆன் என்ற சிறுமிக்கு புரியவில்லை. நமக்கும் தான்!!!! ஹிட்லருக்கு ஏன் யூதர்கள் மேல் இவ்வளவு வெறுப்பு என்பதற்கும் அவளுக்கு விடை கிடைக்கவில்லை. ஆனால் ஒரு முறை ஹிட்லரை கொல்லும் முயற்சியைப்பற்றி கேள்விப்பட்டு மிகுந்த மகிழ்ச்சியடைகிறாள். ஹிட்லரின் இறுதிகாலம் நெருங்குவதாக எண்ணி திருப்தியடைகிறாள்.

கிடைத்த நேரத்தில் ஒருவருக்குத் தெரிந்ததை மற்றவருக்கு சொல்லுத்தருதலுடன், தானும் புதிதாக சிலவற்றை கற்றுக்கொள்கிறார்கள். ஆனின் மனதில் அவளின் பள்ளி நினைவுகளும், தோழிகள் பற்றிய நினைவுகளும் இருந்த வண்ணம் உள்ளன. பல பேர் ஜெர்மானியர்களால் கொல்லப்பட்டுவரும் நிலையில் தான் பாதுகாப்பாக இருப்பதை நன்றியோடு மனதில் நிறுத்தினாலும், தான் மீண்டும் சுதந்திரமாக, இயற்கையோடு வாழும் வாழ்க்கையை எதிர்நோக்கி ஏக்கத்துடனும், எதிர்பார்ப்புடனும் காத்துக்கொண்டிருக்கிறாள்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாப்பாக இருந்தவர்கள் போர் முடிய சில மாதங்களே இருக்கும் நிலையில் ஜெர்மானியர்களிடம் மாட்டிக்கொள்கின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திற்கு இழுத்துச் செல்லப்படுகின்றனர். ஆனின் தந்தை மட்டுமே தப்புத்துக்கொள்கிறார். இவர்களுக்கு உதவியவர்களும் தண்டிக்கப்படுகிறார்கள். பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு தன் அக்காவுடன் அடைத்து வைக்கப்பட்ட இடத்தில் 'டைஃபஸ்" நோயால் இருவரும் ஒருவர் பின் ஒருவராக இறக்கிறார்கள். 

ஏன் கொல்லப்படுகிறோம், எதற்கு இந்த இனவெறி, போர் என எதுவும் அறியாத, அல்லது புரிந்துகொள்ள இயலாத குழந்தைகளின் உயிர்கள் பரிக்கப்பட்டன.  அவ்வாறே ஆன் கொடூரமான இந்த உலகைவிட்டுச் சென்றாள். அவளின் டைரியை நமக்காக விட்டுவிட்டு!!! 💓

Friday, March 15, 2024

கேள்வி நல்லா தான் இருக்கு!!

எங்களின் மகள் பிற குழந்தைகளைப் போன்று பல சுவாரஸ்யமான கேள்விகள், எடக்குமுடக்கானவை, ஆழமானவை என பலவாறு கேட்பதுண்டு. பெற்றோர்களாகிய நாங்கள் அவை பற்றி நிறைய பேசுவதுண்டு. ஆனால் இது வரை அக்கேள்விகளை எங்கும் எழுதி வைத்தது இல்லை. சிலவற்றையேனும் எழுதி வைக்க வேண்டும் அல்லது இம்மாதிரியான இடங்களில் பதிவு செய்து வைக்க வேண்டும் என தோன்றியுள்ளது. 

Thank god! Our kid hasn't asked us this question yet! 🙂 — If you want to  grow as a parent and understand your child better, take a look… | Instagram

அவ்வெண்ணத்தின் முதல் பதிவாக இன்று காலை எனக்கும் என் மகளுக்கும் இடையேயான உரையாடலின் ஒரு பகுதி. பள்ளி செல்லும் போது காரில் "கிட்டார் கம்பியின் மேலே நின்று" என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. 

"இந்த பாட்டு உனக்கு பிடிக்குமா அம்மா?"

"கொஞ்சமா பிடிக்கும் பாப்பா."

"இந்த பாட்டுல டான்ஸ் ஆடுவாங்களா?"

"இல்ல. இருக்காது. இங்கயும் அங்கயும் நடந்திட்டிருப்பாங்க."

"அப்ப போர் தான்."

"ஆமா பாப்பா."

"எல்லா பாட்டுலேயும் girlsக்கு easyஆன steps தான் இருக்கும். இல்ல டான்ஸே இருக்காது. Boys க்கு தான் நல்ல steps இருக்கும் அம்மா."

"ஏன் பாப்பா அப்படி சொல்ற?"

"உனக்கு தெரியாதா? எல்லா பாட்டுலேயும் அப்படித்தான். Beastல வர பாட்டுல கொஞ்சம் பரவயில்ல. Don பாட்டுல அந்த அக்காக்கு ஒன்னுமே இருக்காது. இப்படி தான் எல்லா பாட்டுலேயும்."

"அப்படியா? சரியாதான் நீ சொல்றனு தோனுது பாப்பா. ஆனா ஏன் அப்படி girlsக்கு மட்டும் கொடுக்குறாங்கனு  நினைக்கற?"

"தெரில. ஒரு வேளை Girlsக்கு நல்லா ஆட வராதுனு நினைக்கறாங்கனு நினைக்கிறேன்."

"உங்க Dance classல அப்படியா நடக்குது?"

"இல்லையே. நாங்க boys & girls ஒரே மாதிரியான steps தான் practice பண்ணி ஆடுவோம்."

குழந்தைகள் எதையும் கவனிக்க தவறுவதில்லை. அது தொடர்பாக கேள்விகள் கேட்க தயங்குவதில்லை. நாம் வெளிப்படையான அல்லது நேர்மையான பதில்கள் தருகிறோமா!!!! அங்கு தான் சிக்கல் தொடங்குகிறது.

Wednesday, March 13, 2024

Miss you Mahe

As I wrote another post today on this blog, it immediately reminded me that I do not have Mahe, who was a wonderful sister and a loving daughter to me, who would always read and get back!!!!

Yeah, it's a month now since we lost a wonderful soul. It is still unbelievable that I often go back to your whatsapp profile to check if my last three messages were read only to find it is not. God, it is painful.

She is the only one to whom I had written those many number of letters so far. There were three of us who used to write to each other even while we were together physically everyday. She was one among the three. It is so heartwarming and heartbreaking at the same time to read her letters today. It does bring a lot of tears and smiles. Not sure to express how it feels. I regret that we did not continue our beautiful ritual of writing to each other.

She is never gonna get to read this letter of mine; yet, I for selfish reasons write this and make myself feel better. 

She is there, out there, somewhere in the sky. Watching her loving husband, tiny kid, her parents and all of us. That's how I feel. Such a wonderful soul who was never in any hurry in any of her works. Such a composed person who loved everyone, mostly unconditionally. We had our own ups and downs in our relationship and glad that we got back to where we left loving each others in her last few years, unaware of that fact. 

Those downs were mainly because of me as I felt a little suffocated with your love. Now I get that you showered all of us with abundance of your love, may be because of your short period of stay on this earth. I feel horrible for having missed you for while! Why did I, Mahe?! and now missing your forever. :-(

All those everyday train travels, long hour chats - in person and on mobile, sharing of letters, movies, restaurants, shopping - those are all so fresh in my mind and I feel terrible that your calm appearance had totally shattered in last few months. 

Though it began as a student-teacher, it grew as sisterly relationship and at one point we started feeling as a mother-daughter duo and it felt so lovely. May be that is why it is difficult to accept her absence.

Do not know what to write more. Wish I could pour out all that I have in me. May be some other time.

Miss you ammu. Love you loads and loads. My tightest hug and kiss to you da.

மஞ்சும்மல் பாய்ஸ் - ஓரிரு கருத்துகள்

தமிழகத்தின் தற்போதைய 'ட்ரெண்டிங் டாக்'  "மஞ்சும்மல் பாய்ஸ்" என்ற மலையாளத் திரைப்படம். மலையாளத் திரைப்படம் என சொன்னாலும் தமிழகத்தில் எடுக்கப்பட்ட, பழைய தமிழ் திரைப்படமான "குணா"வின் பாடல்களையும், "குணா" திரைப்படம் எடுக்கப்பட்ட குகையிலும், தமிழ் கதாபாத்திரங்கள் சரிசமமாக இருக்கும் திரைப்படம் "மஞ்சும்மல் பாய்ஸ்."

 Manjummel Boys - Sacnilk

மேலோட்டமாக பார்த்தால் நட்பினை கொண்டாடும் திரைப்படம் என தோன்றும். மக்கள் அப்படத்தை கொண்டாடும் விதத்தையும், அப்படத்தினைக் கொண்டு வெளிவரும் "மீம்ஸ்"கள்  ஆகியவை இப்படத்தினை பார்க்காத ஒவ்வொரு தமிழனயையும் ஏக்கப்படவும், ஏதோ குற்றவுணர்விற்கு உள்ளாக்குவதாகவும் இருந்தது/இருக்கிறது என்று சொன்னால் மிகையல்ல. குறிப்பாக இளைய தலைமுறையினரை.

ஆனால் படத்தில் கொண்டாடக்கூடிய அம்சமாக எனக்கு இருந்த ஒன்றே ஒன்று "குணா"வின் பாடல்கள். பெரிய திரையில் பெண் குரலில் ஒலிக்கும் "மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதர் காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது" என்பது அலாதியான அனுபவமாக இருந்தது.

சுற்றுலா செல்ல பணமில்லை என சொல்லும் ஒரு கதாபாத்திரம். 'நாங்க பாத்துக்குறோம், வா' என கூட்டில் செல்லும் நட்பு, வாகனத்தில் இடம் கொள்ளாத போதும் விதியை மீறி கூடுதல் ஆட்களோடு செல்வது, சுற்றுலாவினருக்கு 'பெண்' ஏற்பாடு செய்து தர முடியுமா என கேட்கும் ஒரு கதாபாத்திரம், குகையில் உள்ளே நுழைய தடை செய்யப்பட்ட பகுதிக்கு குடித்துவிட்டு மீறி நுழையும் கும்பல். இதில் பாராட்டிக் கொண்டாட என்ன உள்ளது?! தன்னால் கட்டாயப்படுத்தி அழைத்து வரப்படும் நண்பன் குகைக்குள் விழுவதும், அவனை காப்பாற்ற வேண்டிய கடமை தன்னுடையது என எண்ணுவதும் பாராட்டுக்குரியதே! எனினும் விதியினை மீறி செல்லாமல் இருந்திருந்தால் உயிர் ஆபத்து நிகழாமல் தவிர்த்திருக்கலாம் என பார்ப்பவர்களுக்கு தோன்றாமல் இருந்திருக்குமா என்ன?!!!

இப்படத்தை பார்த்து இதுபோல் செய்யத்துடிக்கும் இளசுகள் நிச்சயம் இருக்கும். அவ்வாறான விளைவே தற்போது கொடைக்கானலிற்கு படையெடுக்க தொடங்கியிருக்கும் சுற்றுலாவினர்.

"யானை டாக்டர்" படித்த எவரும் இத்திரைப்படத்தை கொண்டாட வாய்ப்பில்லை!!!

யானை டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி | வாசகம்


மின்மினி பூச்சிகள் 🐝

என் சிறு வயதில் மின்மினி பூச்சிகள் ஏராளமாக இருந்தன. நாங்கள் வசித்த தெருவில் மாலை, இரவு வேளைகளில் விளையாடும் போது மின்மினிகளும் சேர்ந்து கொள்...