Monday, March 10, 2025

மொட்ட கடுதாசி

 


தபால் பெட்டி எழுதிய கடிதம் - எஸ்.ரா.வின் இந்த புத்தகம் சிறார்காளுக்கான நாவல். பெரியவர்களும் வாசிக்கலாம். நம் பழைய நினைவுகளை கிளறச்செய்வதாக இருக்கும்.

அதையெல்லாம் விட்டுவிடுவோம். 

புத்தகத்தின் ஒரு சிறிய பகுதிக்கு வருவோம்: 

 பகுதி 1

 

 பகுதி 2

 

                பகுதி 3

 

ஒருவன் அல்லது ஒருத்தி தன் அடையாளத்தை மறைத்தோ, மாற்றியோ இவ்வாறான செயல்கள் செய்வது அரசு பணிகளில் வாடிக்கை. நேர்மையானவற்றை ஏன் ஒருவர் அடையாளத்தை மறைத்து செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுவது நியாயம் தானே. இல்லையெனில் சரியானவற்றை கேட்க துணிச்சல் இல்லாத போது அதனை கேட்காமல் இருப்பதே நலம் என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. தகவல் அறியும் உரிமைச் சட்டமும் கிட்டதட்ட "மொட்ட கடுதாசி" அளவுக்கு பயன்படுத்தப்படுவதை அரசு பணியில் இருப்பவர்கள் ஒப்புக்கொள்வர்.

பணியில் அடிக்கடி "மொட்ட கடுதாசி"யினை சந்தித்து சளித்தே விட்டது. இந்த பகுதியை படித்தவுடன் அவ்வாறு கடிதம் போடுபவர்கள் தலையில் தபால் பெட்டியானது ஒவ்வொரு கடிதத்திற்கும் ஒரு குட்டு என வைத்தால், ஊரில் எத்தனை பேர் தலையில் குட்டு நீண்டிருக்கும் என கற்பனை செய்தால் (வடிவேலு அவர்கள் ஒரு கல்லூரி விடுதியில் மாணவர்களிடம் குட்டு வாங்கும் காட்சியினை நினைவு படுத்திக்கொள்ளவும்) குதூகலமாக உள்ளது (என் கண் முன் சில முகங்கள் வந்து செல்கின்றன).

வரலாற்றில் ஒரு ரகசியத்தை சுமந்து செல்ல ஒருத்தருக்கு மொட்டை அடித்து அதில் செய்தியினை எழுதி அனுப்பியது தான் முதல் "மொட்ட கடுதாசி" என்று திரு. இறையன்பு அவர்கள் ஒரு காணொலியில் சொல்லியிருந்தார். நம்மிடையே பேச்சு வழக்கில் "மொட்ட கடுதாசி"யானது மிக பிரபலம். யாரையேனும் மிரட்டுவதற்கோ, எச்சரிப்பதற்கோ, காழ்ப்புணர்ச்சியை தீர்த்துக்கொள்ளவோ, ஒருவரின் பணியை கெடுக்கவோ, இன்னும் ஏகப்பட்ட பொய் காரணங்களுக்காக இன்று "மொட்ட கடுதாசி"யானது உலாவுகிறது. இவ்வாறு நேரத்தை விரயம் செய்பவர்களுக்கு தபால் பெட்டி உயிர்ப்பித்து வந்து நகைச்சுவையான தண்டனைகளை வழங்கினால் நன்றாகத்தான் இருக்கும்! 

ம்ம்ம்ம் (பாதிக்கப்பட்டவளின் மனக்குமுறல் 😃)

Jane Goodall - A Netflix Interview

Jane Goodall - A name most of us would have come across in the last month as she passed away. As planned, her interview, titled "Famo...